பால் வாங்க போன பாட்டி.. குழந்தைகளுடன் மாயமான கள்ளக்குறிச்சி சரண்யா... கடைசியில் ட்விஸ்ட்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே பால் வாங்கி வருவதற்காக பாட்டி கடைக்கு போன போது , வீட்டில் இருந்த பெண், தனது 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தானும் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே பீளமேடு கிராமத்தை சேர்ந்த 29 வயதாகும் தேவேந்திரன் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு வடதொரசலூர் கிராமத்தை சே்ாந்த 23 வயதாகும் சரண்யாவுக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் தமிழ் யாழினி என்ற மகளும், ஒரு வயதில் ஜாஜித் என்ற மகனும் இருந்தார்கள்

பொங்கல் அன்று சரண்யாவுக்கும், தேவேந்திரனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாய்தகராறு கடும் சண்டையாக மாறியதால், கோபித்துக் கொண்ட சரண்யா, கணவர் வீட்டில் இருந்துது தனது குழந்தைகளுடன் வடதொரசலூர் கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு போய்விட்டார்.
குழந்தைகளுடன் அம்மாவிற்கு சரண்யா வந்த போது, வீட்டில் அவருடைய பாட்டி சின்னபொண்ணு மட்டும் இருந்திருக்கிறார். தொடர்ந்து சின்னபொண்ணு பால் வாங்கி வருவதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது சரண்யாவையும் அவருடைய குழந்தைளும் மாயமாகினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சின்னப்பொண்ணு கத்தி கூச்சலிட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் சரண்யாவையும் அவருடைய குழந்தைகளையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் உள்ள ஏரிக்கரை அருகே இருந்த விவசாய கிணற்றுக்கு வெளியே சரண்யாவின் துப்பட்டா இருந்தது.
இதைப்பார்த்து திடுக்கிட்ட அவர்கள், சரண்யா குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று நினைத்தனர். இது பற்றி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படட்து. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்த தண்ணீரை மின் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் நேற்று முன்தினம் மாலை முதல் ஈடுபட்டார்கள்.
நேற்று அதிகாலை 6 மணியளவில் கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றி விட்டு பார்த்தபோது, குழந்தைகள் தமிழ் யாழினி மற்றும் ஜாஜித் ஆகியோர் இறந்து கிடந்தனர் இவர்களின் உடல்களை போலீசாா் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் சரண்யாவை காணாததால் தொடர்ந்து அவரை தேடும் பணியில் உறவினர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் சரண்யா வடதொரசலூர் ஏரி பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. உடனே அங்கு விரைந்து சென்ற அவரது உறவினர்கள் முகத்தில் தண்ணீரை தெளித்து எழுப்பி உள்ளார்கள்.
அப்போது சரண்யாவிடம் விசாரித்தபோது, எனக்கும் கணருக்கும் இடையே குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இந்த தகராறில் நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். நான் இறந்துவிட்டால் குழந்தைகள் அனாதையாகி விடக்கூடாது என்று அவர்களையும் கொலை செய்ய எண்ணி இருவரையும் கிணற்றில் வீசி விட்டு நானும் உள்ளே குதித்துவிட்டேன். ஆனால் நீச்சல் தெரிந்ததால் என்னால் தண்ணீரில் மூழ்கமுடியவில்லை.
இதனால் வெளியே வந்த நான் மீண்டும் தற்கொலை செய்துகொள்வதற்காக அருகில் இருந்த உயர்அழுத்த கோபுர மின்கம்பத்தில் ஏறினேன். அப்போது மயக்கம் ஏற்பட்டதால் கீழே விழுந்து விட்டேன் என்றார். தொடர்ந்து அவரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சரண்யாவிற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications