அழகுத்தமிழ்பேசும் தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டபோது ராகுல் எங்கு போனார்? தமிழிசை நறுக்
இலங்கையில் அழகுத் தமிழ் பேசும் தமிழர்கள் கொல்லப்பட்ட போது ராகுல் எங்கே போனார் என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம்: இலங்கையில் அழகுத் தமிழ் பேசும் தமிழர்கள் கொல்லப்பட்ட போது ராகுல் எங்கே போனார் என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் 84வது மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜக அரசையும் பாஜக தலைவர்களையும் கடுமையாக விமர்சித்தார்.
தமிழகத்தில் பாஜக அரசு தமிழை அழிக்கப்பார்ப்பதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் ராகுல்காந்தியின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காந்தி பெயர்
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை நீரவ் மோடியுடன் காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு பேசுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். காந்தி பெயரை காங்கிரஸ் குடும்பம் தவறகாக பயன்படுத்தி வருகிறது என்றும் தமிழிசை குற்றம்சாட்டினார்.

தமிழிசை பதிலடி
பாமர மக்களை ஏமாற்றுவதற்காக சோனியா தனது பெயருடன் காந்தி பெயரை சேர்த்துக்கொண்டதாகவும் அவர் சாடினார். தமிழகத்தில் வேற்று மொழியை பாஜக திணிக்க பார்ப்பதாக கூறிய ராகுலின் குற்றச்சாட்டுக்கும் தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.

ராகுல் எங்கே போனார்?
அழகுத்தமிழ்பேசும் தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டபோது ராகுல் எங்கு சென்றார்? என்றும் தமிழிசை கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் பிழைப்பு நடத்த முடியாததால் தமிழை வைத்து பிழைப்பு நடத்த பார்க்கிறார் ராகுல் என்றும் தமிழிசை குற்றம்சாட்டினார்.

குடும்பத்தின் குரல்
தமிழகம் புறக்கணிப்படுவது போல ஒரு மாயை உருவாக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். காங்கிரஸின் குரல் ஒன்றும் நாட்டின் குரல் இல்லை என்றும் ஒரு குடும்பத்தின் குரல் என்றும் தமிழிசை தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications