'அவங்க' முதல்வர் வேட்பாளர் எங்கே இருக்கிறார் என்றே தெரியலையே: அன்புமணி
கோவை: தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி முதல்வர் வேட்பாளரான விஜயகாந்த் எங்கு உள்ளார் என்றே தெரியவில்லை என பாமக முதல்வர் வேட்பாளரான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்தார். இதையடுத்து விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து அவரை காண முடியவில்லை என்று பலரும் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் இது குறித்து பாமக முதல்வர் வேட்பாளரான அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நாங்கள் கூட்டணி குறித்து எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. விரைவில் பாமக வேட்பாளர் பட்டியல் வெளியாகும். மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து 10 நாட்களாகிவிட்டது. ஆனால் அவர் இது குறித்து இதுவரை எதுவும் கூறவில்லை. அது ஏன்?
முதல்வர் வேட்பாளரான விஜயகாந்த் எங்கு உள்ளார் என்றே தெரியவில்லை.
நான் பாமக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மறுநாளே பத்திரிக்கையாளர்களை 2 மணிநேரம் சந்தித்து பேசினேன். மாவட்டம் மாவட்டமாக சென்று மக்களை சந்தித்து பேசினேன். தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி தலைவர்களிடையே கருத்து ஒற்றுமை இல்லை என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications