ஆமா, ரெய்டு நடந்தப்ப "ஜெ. ஆவி" எங்கே போயிருந்துச்சு.. அதிகாரிகளை அடிக்காமல் விட்டது ஏன்?

ஜெ. வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடந்தபோது அங்கு அவரது ஆவி ஏன் அதிகாரிகளை பயமுறுத்தவில்லை என்ற கலகலப்பு கேள்வி எழுந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஜெயலலிதாவின் அறை தவிர சல்லி சல்லியாக சலித்த அதிகாரிகள் - கடித பண்டல்களை எடுத்துச்சென்றது ஏன்?

    சென்னை: ஜெயலலிதாவின் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியபோது அங்கேயே சுற்றிக் கொண்டிருப்பதாக கூறப்படும் அவரது ஆவி அதிகாரிகளை அடிக்கவில்லையா என்ற கலகலப்பு கேள்வி எழுந்துள்ளது.

    ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நலக் கோளாறுகள் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் 75 நாள்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா இறந்து விட்டார்.

    ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரது புகைப்படம் எடுத்து வெளியிடவில்லை. மேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்றபோது கூட அவர்கள் ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை என்று கூறப்பட்டது.

    ஜெயலலிதா மரணம் இயற்கையானது அல்ல

    ஜெயலலிதா மரணம் இயற்கையானது அல்ல

    ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது மரணம் இயற்கையானது அல்ல என்றும் பொதுமக்கள் சந்தேகித்தனர். இதனிடையே ஜெயலலிதா வீட்டில் அவரது ஆவி சுத்துவதாகவும் பல்வேறு தொல்லைகளை கொடுப்பதாலும் அங்கேயே டேரா போட்டிருந்த சசிகலாவின் உறவினர்கள் வெளியேறியதாக கூறப்பட்டது.

    பிரசன்னம் பார்த்து தகவல்

    பிரசன்னம் பார்த்து தகவல்

    இதையடுத்து ஜெயலலிதாவின் ஆவி போயஸ் கார்டனில் சுத்தி கொண்டிருப்பதாகவும் 25 முதல் 30 பேர் மீது மிகுந்த கோபத்துடன் இருப்பதாகவும் கேரள நம்பூதிரி ஒருவர் பிரசன்னம் பார்த்து கூறியிருந்தார். மேலும் தனக்கு துரோகம் இழைத்தவர்களை பழிவாங்காமல் விட மாட்டேன் என்று ஜெ.வின் ஆவி சபதம் ஏற்றதாகவும் அந்த நம்பூதிரி தெரிவித்தார்.

    வருமான வரித் துறை ரெய்டு

    வருமான வரித் துறை ரெய்டு

    இந்நிலையில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் நேற்றிரவு வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினர். அப்போது அங்கிருந்த கடிதங்களையும், லேப்டாப் மற்றும் பென் டிரைவ்களையும் அதிகாரிகள் அள்ளிச் சென்றனர்.

    பயமுறுத்தாதது ஏன்

    பயமுறுத்தாதது ஏன்

    சசிகலா கூட்டத்தினரை பயமுறுத்தி போயஸ் கார்டனில் இருந்து விரட்டி அடித்ததாக கூறப்படும் ஜெயலலிதாவின் ஆவி ஐடி ரெய்டின் போது எங்கே சென்றிருந்தது. அதிகாரிகளை பயமுறுத்தாதது ஏன்.ஏற்கெனவே உச்சத்தில் இருக்கும் ஆவி அதிகாரிகளை அறையாதது ஏன் என்பன உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன.

    சசிகலா கூட்டத்தை ஒழித்துக் கட்டவா

    சசிகலா கூட்டத்தை ஒழித்துக் கட்டவா


    சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளில் சோதனை நடந்த நிலையில் போயஸ் கார்டனிலேயே சசிகலாவும் அவரது உறவினர்களும் தங்கியிருந்ததால் இங்கும் சோதனை நடத்த வேண்டும் என்று அழைத்ததே ஜெயலலிதாவின் ஆவிதானா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    என்னவோ போடா மாதவா!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+