மகாத்மா காந்தி ‘அஸ்தியை’ வைத்து கோவில் கட்டிய தியாகிகள்... வழிபடும் பொதுமக்கள்
கம்பம்: கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் கடந்த 29 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட காந்தி கோயிலில் காந்தி ஜெயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.
கத்தியின்ரி, ரத்தமின்றி இந்தியாவிற்கு அஹிம்சை முறையில் சுதந்திரம் பெற்றுத் தந்த தேசப்பிதா மகாத்மா காந்திஜிக்கு உலகின் பல இடங்களில் நினைவு மண்டபங்களும், சிலைகளும் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால்,கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்னர் காந்திக்கு கோயில் கட்டிய பெருமை கம்பம் அருகில் உள்ள காமயகவுண்டன்பட்டியையேச் சேரும். காந்தி ஜெயந்தியை விழாவாக இவ்வூரார் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

தியாகிகள் ஊர்....
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான இந்திய தேசியப் படையில் இருந்த சோமநாதன், சிக்கந்தர் ஆகியோரும் மற்றும் சின்னியகவுடர், பீர்முகமது, சையதுமுகமது, வெள்ளையத்தா, வெங்கடாசல செட்டியார், நாராயண பண்டிதர் உள்ளிட்ட சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற காந்தியவாதிகள் நூற்றுக்கணக்காணவர்களைக் கொண்ட ஊர் காமயகவுண்டன்பட்டி.

தியாகிகள்...
சுதந்திரத்துக்கு பாடுபட்ட முன்னாள் எம்.பி., கே. சக்திவேல் கவுடர், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்.கே. பாண்டியராஜ், பரமசிவத் தேவர், கிருஷ்ணசாமி, சுருளியாண்டி ஆசாரி, தொட்டப்பனு, வீராச்சாமி நாயுடு போன்றோரும் இவ்வூர்காரர்களே.

காந்திஜியின் அஸ்தி...
காமயகவுண்டன்பட்டி கிராமம் தேசப்பற்று நிறைந்த தியாகிகளின் ஊராக திகழ்ந்த காரணத்தால், காந்தியின் அஸ்தி நாட்டின் பல பகுதிகளில் உள்ள புனித நதிகளில் கரைக்கப்பட்ட போது, அஸ்தியின் ஒரு பகுதியை காமயகவுண்டன்பட்டியில் வைத்து பாதுகாக்கப்பட்டது.

காந்திக் கோவில்....
கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தக் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., சக்திவடிவேல் கவுடர், என்.கே. ராமராஜ், என்.கே. பாண்டியராஜ் ஆகியோர் சேர்ந்து, காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டிருந்த கம்பம் சாலையில், பொதுமக்கள் வழிபடும் வகையில் மகாத்மா காந்திக்கு கோயில் எழுப்பினர்.

6 அடி காந்திச்சிலை...
இந்தக் காந்தி கோவிலில் உயர்ந்த கோபுரத்துடன் 6 அடி உயரத்தில் காந்திக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.

திறப்புவிழா...
கோயில் கட்டுமானப் பணிகள் முடிந்து, 1985 இல் அப்போதைய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் இக் கோயிலை திறந்து வைத்தார்.

பொதுமக்கள் பார்வைக்கு....
கோயில் வளாகத்தில் காந்தி இறந்த அன்று நடைபெற்ற ஊர்வலக் காட்சிகளின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. சத்திய சோதனை, காந்தி சுயசரிதை உள்ளிட்ட ஏராளமான புத்தகங்களும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

சிறப்புப் பூஜைகள்...
இக்கோயிலில், காந்தி பிறந்த நாள், நினைவு நாள், சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் முக்கிய தேசத் தலைவர்கள் பிறந்த நாளில் சிறப்புப் பூஜைகளும், சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

ஊர்வலம்....
காந்தி ஜெயந்தி நாளில், காந்தி படத்தை தேரில் வைத்து நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலம் நடைபெறுகின்ற ஊர்வலத்தின்போது, பொதுமக்கள் காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தேங்காய் உடைத்து, பழங்கள் வைத்து வழிபட்டு வருகின்றனர்.

வட்டிப்பணத்தில் பராமரிப்பு....
இந்தக் கோயில் பராமரிப்புச் செலவுக்காக வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள 30 ஆயிரம் ரூபாயிலிருந்து கிடைக்கும் வட்டிப்பணம் மூலமே தற்போதும் கோவிலின் பராமரிப்பு வேலைகள் செய்யப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் நிதியுதவி...
சமீபத்தில் பொதுமக்கள் நிதி உதவியுடன் ரூ. 10 லட்சம் செலவில் இக் கோயில் முன் தியான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications