அதிமுக கூட்டணிக்கு 42.13%, திமுக கூட்டணிக்கு 38.66% ஆதரவு: நியூஸ் 7 கருத்துக்கணிப்பு
சென்னை2016 சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு அதிக அளவில் வெற்றி வாய்ப்புள்ளதாக 42.13 சதவீதம் பேர் தெரிவித்துள்ளதாக நியூஸ் 7 தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.
லயோலா கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நியூஸ் 7 தொலைக்காட்சி இணைந்து 2016 சட்டசபை தேர்தல் பற்றி கருத்து கணிப்பு நடத்தியுள்ளன. சட்டசபை தேர்தலில் எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்று மாவட்ட வாரியாக மக்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று கருதுவதாக, 42.13 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று 38.66 சதவீதம் பேரும், பிரதான கட்சிகள் நீங்கலான இதர கட்சிகள் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக 19.21 சதவீதம் பேர் கூறியுள்ளதாகவும் நியூஸ் 7 கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கடலூரில் மக்களின் மனநிலை இருவேறு விதமாக காணப்படுகிறது.
•தமிழகத்தின் தலைநகரான சென்னையில், வெள்ள பாதிப்பிற்கு பிறகும் கூட, அதிமுகவிற்கு 45.2 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். திமுகவிற்கு 34.6 சதவீதம் பேரும், இதர கட்சிகளின் கூட்டணிக்கு 20.2 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
• வெள்ள பாதிப்பு மாவட்டங்களின் ஒன்றான திருவள்ளூரில், அதிமுகவிற்கு ஆதரவான நிலையே காணப்படுகிறது. அதிமுகவிற்கு 43 சதவீதம் பேரும், திமுகவிற்கு ஆதரவாக 26.5 சதவீதம் பேரும் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். இங்கு இதர கட்சிகளுக்கு 30.5 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
• சமீபத்தில் வெள்ள பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் ஒன்றான காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுகவிற்கு 51 சதவீத பேரும், அதிமுகவிற்கு 30.3 சதவீதம் பேரும், இதர கட்சிகளின் கூட்டணிக்கு 18.6 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
• வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்கள் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளனர். அதிமுகவை விட, சுமார் 4 சதவீதம் பேர் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதிமுக கூட்டணிக்கு 41.8 சதவிகித மக்களும், திமுக கூட்டணிக்கு 45.2 சதவிகித வாக்காளர்களும் பிற கூட்டணிக்கு 15.2 சதவிகித வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
• அரியலூரில் அதிமுகவிற்கு ஆதரவாக 47 சதவீதம் பேரும், திமுகவிற்கு ஆதரவாக 36.4 சதவீதம் பேரும், பிற கட்சிகளுக்கு வாய்ப்பு என 16.6 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
•தருமபுரியில், திமுகவிற்கு அதிகம் பேர் ஆதரவாக கருத்து கூறியுள்ளனர். அங்கு அதிமுகவிற்கு 37 சதவீதம் பேரும், திமுகவிற்கு 51 சதவீதம் பேரும், இதர கட்சிகளுக்கு 12 சதவீதம் பேரும் வெற்றிவாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
• வேலூரில் அதிமுகவிற்கு ஆதரவாக 27.4 சதவீதம் பேரும், திமுகவிற்கு 45 சதவீதம் பேரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதர கட்சிகளுக்கு அதிமுகவிற்கு நிகரான ஆதரவு கிடைத்துள்ளது.
• விழுப்புரம் பகுதியில் அதிமுகவிற்கு 40.4 சதவீதம் பேரும், திமுகவிற்கு 43.4 பேரும், இதர கட்சிகளை 15.8 சதவீதம் பேரும் விரும்பியுள்ளனர்.
• கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுகவிற்கு சாதமான சூழல் நிலவுவதை கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. அங்கு அதிமுகவிற்கு 39.3 சதவீதம் பேரும், திமுகவிற்கு 31.3 பேரும், இதர கட்சிகளின் கூட்டணிக்கு 29.1 சதவீதம் பேரும் ஆதரவு மனநிலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
• மதுரையைப் பொருத்தவரை ,திமுகவும் அதிமுகவிற்கு கிட்டதட்ட ஒத்த ஆதரவு காணப்படுகிறது என்றே கூறலாம். அங்கு அதிமுகவிற்கு 36.8 சதவீதம் பேரும், திமுக கூட்டணிக்கு 35.9 சதவீதம் பேரும், இதர கட்சிகளுக்கு 27.3 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
• திண்டுக்கல்லிலும் திமுக கூட்டணிக்கு ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது. அதிமுகவிற்கு ஆதரவாக 40.4 சதவீதம் பேரும், திமுகவிற்கு 46.3 சதவீதம் பேரும் இதர கூட்டணிக்கு 13.3 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
• கோவையில் அதிமுகவிற்கு சாதகமாக 50.5 சதவீதம் பேரும், திமுகவிற்கு இதில் பாதியளவாக 25.5 பேரும், இதர கட்சிகளுக்கு 24 சதவீதம் பேரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
•ஈரோடு பகுதியைப் பொருத்தவரை, அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக 50 சதவீதம் பேரும், இதர கட்சிகளுக்கான கூட்டணிக்கு 26.3 சதவீதம் பேரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இத்தொகுதியில் திமுக 23.6 சதவீத மக்களின் விருப்பத்துடன் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
•தொழில் நகரமான திருப்பூரில் அதிமுகவிற்கு 50.3 சதவீதம் பேரும், திமுகவிற்கு 31 சதவீதம் பேரும், இதர கட்சிகளுக்கு 18.7 சதவீதம் பேரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
•கரூர் பகுதியில் அதிமுகவிற்கு 40 சதவீதம் பேரும், திமுகவிற்கு 33.5 சதவீதம் பேரும் இதர கட்சிகளின் கூட்டணிக்கு 16.5 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
•தொழில்நகரமான நாமக்கல்லில் அதிமுகவிற்கு 52 சதவீதம் பேரும், திமுகவிற்கு 37 சதவீதம் பேரும் இதர கட்சிகளின் கூட்டணிக்கு 11 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
•திமுகவின் செல்வாக்கு மிக்க பகுதியாக கருதப்படும் நீலகிரியில் அதன் வாக்கு வங்கியை தொடர்ந்து தக்கவைத்திருக்கிறது என்றே கூறலாம். அதிமுகவிற்கு 34 சதவீதம் பேரும், திமுகவிற்கு 39 சதவீதம் பேரும், இதர கட்சிகளுக்கு 37 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
•புதுக்கோட்டையை பொருத்தவரை, அதிமுகவிற்கு 42.6 சதவீதம் பேரும், திமுகவிற்கு சாதகமாக 36.8 சதவீதம் பேரும் கருத்து கூறியுள்ளனர். பெரம்பலூரில் 40 சதவீதம் பேர் அதிமுகவுக்கும், 34 சதவீதம் பேர் திமுகவுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதர கட்சிகளின் கூட்டணிக்கு ஆதரவாக சுமார் 25 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
•சிவகங்கையில், திமுகவின் கை ஓங்கியிருப்பதை கருத்துக்கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன. அதிமுகவிற்கு 40 சதவீதம் பேரும், திமுகவிற்கு 49 சதவீதம் பேரும், இதர கட்சிகளுக்கு 11 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
•ராமநாதபுரத்தில் திமுகவிற்கு ஆதரவாக 35.9 சதவீதம் பேரும், அதிமுகவிற்கு 37.3 சதவீதம் பேரும், இதர கட்சிகளின் கூட்டணிக்கு 26.8 சதவீதம் பேரும் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
•சேலத்தில் அதிமுக திமுகவிற்கும் கடும்போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு அதிமுகவிற்கு 45 சதவீதம் பேரும், திமுகவிற்கு 43 பேரும், பிற கட்சிகளுக்கு 11.5 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
• தமிழகத்தின் முக்கிய விவசாய மாவட்டமான தஞ்சாவூரில் அதிமுக கூட்டணிக்கு 45.4 சதவீதம் பேரும், திமுக கூட்டணிக்கு 43.2 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
•மீனவர்கள் நிறைந்த நாகை மாவட்டத்தில் அதிமுகவிற்கு சாதகமாக 42.5 சதவீதம் பேரும், திமுகவிற்கு ஆதரவாக 38.7 சதவீதம் பேரும் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
• திமுகவின் செல்வாக்கு மிக்க பகுதியாக கருதப்படும் திருவாரூரில், அக்கட்சிக்கு 46.7 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு 32.2 சதவீதம் பேரும், இதர கட்சிகளின் கூட்டணிக்கு 21 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
•திருவண்ணாமலையில் அதிமுகவுக்கு 38.8 பேரும், திமுகவுக்கு, 36.9 சதவீதம் பேரும், இதர கட்சியினருக்கு 26.2 சதவீதமும் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
• திருச்சியில் அதிமுகவிற்கு ஆதரவு அலை வீசுகிறது என்று கூறுமளவிற்கு சுமார் 51.2 சதவீதம் பேரும், திமுக கூட்டணிக்கு 36.2 பேரும், இதர கட்சியினருக்கு 12.7 சதவீதம் பேரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
•விருதுநகரில் திமுகவிற்கு 37 சதவீதம் பேரும், அதிமுகவுக்கு 29.3 சதவீதம் பேரும், இதர கட்சியினருக்கு அதிமுகவினரை விட அதிக அளவாக 33.3 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
•தேனி மாவட்டத்தில் அதிமுகவிற்கு 46.2 சதவீதம் பேரும், திமுகவிற்கு 41.2 சதவீதம் பேரும், மற்ற கட்சிகளுக்கு 12.6 சதவீதம் பேரும் ஆதரவாக கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
• தென் தமிழகத்தின் முக்கிய பகுதியான திருநெல்வேலியில் அதிமுகவுக்கு 41.5 சதவீதம் பேரும், திமுகவிற்கு 33 சதவீதம் பேரும், இதர கட்சிகளுக்கு 25.5 சதவீதம் பேரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
•தூத்துக்குடியில் திமுக ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு திமுகவிற்கு 50 சதவீதம் பேரும், அதிமுகவிற்கு 36 சதவீதம் பேரும் இதர கூட்டணிகளுக்கு 14 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
• கன்னியாகுமரியில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக 38.7 சதவீதம் பேரும், அதிமுகவிற்கு ஆதரவாக 34.6 சதவீதம் பேரும், இதர கட்சிகளின் கூட்டணிக்கு 26.7 சதவீதம் பேரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் கூட்டணி பேச்சுவார்த்தைகளும், பேரங்களும் களைகட்ட உள்ளன. அமையும் கூட்டணியைப் பொறுத்து வெற்றிக்கான வாய்ப்புகள் மாறலாம் என்பது அரசியல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications