வெள்ளையான நிறத்தில் குற்றாலம் மெயின் அருவியில் மலைப்பாம்பு! கிட்ட பார்த்தால்? ஆடிப்போன தென்காசி
தென்காசி: கோடையின் வறட்சி காரணமாக பாம்புகள் குடியிருப்பு பகுதிகள் போல நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கும் வந்துவிடுவதுண்டு.. அதிலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளை சுற்றிலும் வனப்பகுதி இருந்தால், பாம்புகள் நடமாட்டம் சற்று அதிகமாகவே இருக்கும். அதனால்தான், சுற்றுலா செல்லும்போது எப்போதும் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வனத்துறை மற்றும் சுற்றுலா துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு வலியுறுத்தியவாறே உள்ளனர்.
சமீபகாலமாகவே பாம்புகள் தொடர்பான அதிர்ச்சியூட்டும் செய்திகளும், வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் வெளியாகி பதற்றத்தை தந்து வருகின்றன.

சமீபத்தில்கூட, உத்தரப்பிரதேசத்தில் ஒரு நபர், பாம்பை முத்தம் கொடுத்து வீடியோ எடுக்க முயன்றபோது அது அவரது நாக்கில் கடித்து, ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார்.
அதேபோல ஆந்திராவில் ஒரு போதை நபர், நல்ல பாம்பு எடுத்து தன்னுடைய கழுத்தில் போட்டு டான்ஸ் ஆடியிருக்கிறார்.. அப்போது போதை நபரை பாம்பு கொத்திய நிலையில், மருத்துவமனையில் சீரியஸ் கண்டிஷனில் அனுமதிக்கப்பட்ட சம்பவமும் நடந்தது.
நீர்நிலைகளில் பாம்புகள்
அதேபோல நீர்நிலைகளை தேடி பாம்புகள் வந்துவிடுவதுண்டு.. முசோரியின் பிரபலமான கெம்ப்டி நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து கொண்டிருந்த போது, திடீரென தண்ணீரில் பாம்பு புகுந்து விட்டது. அங்கே அருவியில் குளித்து கொண்டிருந்த மக்கள் இதைப் பார்த்து அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.
நம்முடைய கொடைக்கானல் நீர்வீழ்ச்சியிலும் பாம்புகள் அடிக்கடி வருவதுண்டு.. காரணம், கொடைக்கானல் மலைப்பகுதியின் பெரும்பாலான இடங்கள் வனப்பகுதியாகவே இருக்கிறது.. இந்த கொடைக்கானல் நுழைவாயில் பகுதியாக வெள்ளி நீர்வீழ்ச்சியில் பாம்பு வருவதுண்டு.. ஒருமுறை பச்சை பாம்பு புகுந்து, சுற்றுலா பயணிகளை தெறிக்க ஓடவிட்டது நினைவிருக்கலாம்.
தென்காசி குற்றாலம்
அதேபோல தென்காசி மாவட்டம், குற்றாலத்தில்கூட இதுபோல பல அதிர்ச்சி சம்பவங்கள் நடந்துள்ளன.. கடந்த ஜுன் மாதம் மெயின் அருவியில் ஒருவர் இரவு நேரத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அருவி தண்ணீரில் அடித்து வரப்பட்ட நீர்ச்சாரைப் பாம்பு ஒன்று, குளித்துக் கொண்டிருந்த ஒருவரின் கையை சுற்றிக் கொண்டது.
கையில் பாம்பை பார்த்ததுமே சுற்றுலா பயணி அதிர்ச்சியடைந்தார்.. சக சுற்றுலா பயணிகளோ இதை பார்த்து ஓட்டம் பிடித்தனர். அப்போது அந்த பகுதியில் மின்தடையும் ஏற்பட்டிருந்தது.. பிறகு, தன்னுடைய செல்போன் வெளிச்சத்தில் நீண்ட நேரம் போராடி, இறுக சுற்றியிருந்த பாம்பை எடுத்து, அந்த பயணி அருவி ஓடையில் வீசினார். இந்த சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது..
10 அடி நீளத்துக்கு பாம்பு
இப்போது மீண்டும் இதே குற்றாலத்தில் பாம்பு வந்துள்ளது.. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி கடந்த 2 நாட்களாகவே தொடர் கனமழை பெய்ததது.. இதன் காரணமாக அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது..
இன்று காலையில்தான் வெள்ளப்பெருக்கு ஓரளவு குறைந்துள்ளது.. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்..
இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் அருவியில் குளித்து கொண்டிருந்தனர்.. அப்போது மெயின் அருவியின் மேல் பகுதியில் இருந்து திடீரென பொத்தென கீழே விழுந்துள்ளது.. இதனால் அருகில் சென்று பார்த்தபோது, அது மலை பாம்பு என்று தெரிந்து, டூரிஸ்டுகள் பதறியடித்து கொண்டு ஓடினார்கள்.
வெள்ளை கலர் மலைப்பாம்பு
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் சொல்லி உள்ளனர்.. உடனே போலீசாரும் வனத்துறையினருக்கு தகவல் தந்து அவர்களை வரவழைத்தனர்..
மெயின் அருவி பகுதிக்கு வந்த வனத்துறையினர் சுமார் 10 அடி நீள மலைப்பாம்பை போராடி அதேசமயம் லாவகமாக பிடித்தனர்..
தடிமனான வெள்ளை நிறத்தில் காணப்பட்ட அந்த மலைப்பாம்பு, வெள்ளத்தில் அடித்து வரப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.. பிறகு, ஒரு பெரிய பையில் அந்த பாம்பை போட்டு பாதுகாப்புடன் எடுத்து சென்று, பிறகு மலைப்பகுதியில் பத்திரமாக விட்டனர். வெள்ளை கலர் மலைப்பாம்பு வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications