மேலும் 4 ராஜ்யசபா எம்பிக்களை பெறப் போகும் அதிமுக 4, திமுகவும் 2 இடங்களில் வெல்லும்
சென்னை: தமிழகத்தில் இருந்து புதிதாக 6 ராஜ்யசபா எம்பிக்கள் ஜூன் மாதம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டு பதவிக் காலம் முடியப் போகும் 6 ராஜ்யசபா எம்பிக்கள் பதவிக்கு வரும் ஜூன் மாதம் 11ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 24ம் தேதி துவங்க உள்ளது.

இந்நிலையில் இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 6 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவதை அடுத்து காலி இடங்களை நிரப்ப, தேர்தல் நடத்தப்படுகிறது.
தேர்தல் அறிவிப்பு மே 24-ம் தேதி வெளியிடப்படுகிறது. அன்றே வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. மே 31-ம் தேதிக்குள் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். ஜூன் 1-ம் தேதி பரிசீலனை நடக்கும். ஜூன் 3-ம் தேதி மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும்.
போட்டி இருந்தால் ஜூன் 11-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும். அன்று மாலை 5 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். ராஜ்யசபா தேர்தல் நடவடிக்கைகள் ஜூன் 13-ம் தேதியுடன் முடியும்.
ராஜ்யசபா உறுப்பினர்கள் மாநில எம்.எல்.ஏ.க்களாலேயே தேர்வு செய்யப்படுகிறார்கள். தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ள நிலையில் யார், யாருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஒருவர் ராஜ்யசபா எம்பியாக 34 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு தேவை. அந்த வகையில் 134 எம்.எல்.ஏ.க்களை பெற்றுள்ள அதிமுகவுக்கு 3 ராஜ்யசபா எம்பிக்கள் பதவி நிச்சயம் கிடைக்கும். 98 எம்.எல்.ஏ.க்களை பெற்றுள்ள திமுகவுக்கு 2 பதவிகள் நிச்சயம். மீதமுள்ள ஒரு பதவிக்கு இழுபறியாக இருக்கும். ஆனால், குறைந்தபட்ச ஓட்டு அடிப்படையில் இதுவும் அதிமுகவுக்கு கிடைக்க தான் வாய்ப்பு அதிகம்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications