தேர்தல் பணம் பதுக்கல் என தீயாய் பரவிய தகவல்.. துரைமுருகன் பங்களா கொள்ளையின் பரபர பின்னணி!
ஏலகிரி: சட்டசபை தேர்தல் பட்டுவாடாவுக்கான எஞ்சிய பணம் பதுக்கப்பட்டிருப்பதாக பரவிய தகவலை நம்பியே திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு சொந்தமான ஏலகிரி பங்களாவில் கொள்ளை நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடா நாடு எஸ்டேட் பங்களாவில் பல நூறு கோடி பணம் பதுக்கப்பட்டிருப்பதாக நம்பி 2017-ல் கொள்ளை முயற்சி நடந்தது. அதில் ஓம் பகதூர் என்ற காவலாளி கொல்லப்பட்டார்.
இந்த கொலை, கொள்ளை முயற்சியில் பலர் சிக்கி சிறைக்கு போனாலும் இதன் பின்னணி குறித்த மர்மம் வெளியாகவில்லை. இப்போது இதே பாணியில்தான் துரைமுருகனின் ஏலகிரி பங்களாவிலும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

கொள்ளை முயற்சி
துரைமுருகன் உள்ளிட்டட அவரது குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஏலகிரி பங்களாவில் பிரேம்குமார், அவரது மனைவி சங்கீதா ஆகியோர் மட்டுமே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தங்கி இருந்தனர். இந்த நிலையில்தான் பங்களாவின் கதவை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது.

சிசிடிவி ஹார்ட் டிஸ்க்
பங்களாவுக்குள் நுழைந்த கொள்ளையர்களுக்கு ஆடம்பரமான, விலை உயர்ந்த எந்த பொருளும் சிக்கவில்லை. அங்கிருந்த கட்டில் போன்ற பொருட்களால் கொள்ளை கும்பமல் ஏமாந்தது. ஆனால் தாங்கள் பிடிபடக் கூடாது என்பதற்காகவே சிசிடிவி காமிராவின் ஹார்ட் டிஸ்க்கை கழற்றி எடுத்துச் சென்றுள்ளனர்.

தேர்தல் பணம் பதுக்கலா?
இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையின் போதுதான், கடந்த சில நாட்களாக ஏலகிரி பகுதியில் ஒரு தகவல் தீயாக பரவியதாம். அதாவது தேர்தலின் போது துரைமுருகன் தரப்பு பணம் பட்டுவாடா செய்ய முடியாமல் எஞ்சிய பல நூறு கோடி ரூபாய் ரொக்கமாக இந்த பங்களாவில்தான் பதுக்கப்பட்டுள்ளது என்பதுதான் அந்த தகவல்.
Recommended Video

சிசிடிவி டார்கெட்
25 ஏக்கர் நிலத்துக்கு நடுவே ஆள் நடமாட்டமே இல்லாத பங்களா என்பதால் பணம் இருக்கலாம் என நம்பி கொள்ளை கும்பல் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் ஹார்ட் டிஸ்க்கை கழற்றி எடுத்துச் செல்லுகிற நபர்கள் எனில் இந்த பங்களாவை பற்றி நன்கு தெரிந்த நபர்களே கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

நன்கு தெரிந்த நபர்களா?
ஏற்கனவே கொடா நாடு எஸ்டேட் பங்களா கொலை கொள்ளையில் தொடர்புடையவர்கள், அங்கே பணிபுரிந்த சிலருடன் இணைந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அதேபோலவே துரைமுருகன் பங்களாவிலும் நடந்திருக்கக் கூடுமோ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications