ஜெயலலிதாவின் மூச்சை நிறுத்தச் சொன்னது யார்.. பி.எச்.பாண்டியன் பரபர கேள்வி!
ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையை நிறுத்தச்சொன்னது யார் என பி.எச்.பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையை நிறுத்த சொன்னது யார் என முன்னாள் சபாநாயகரும், ஓபிஎஸ் அணி ஆதரவாளருமான பிஎச்.பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் நிறுத்தச் சொன்னார்களாக என்றும் அவர் வினவியுள்ளார்.
ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் பல்வேறு தரப்பினரும் சந்தேகம் கிளப்பி வருகின்றனர்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஓபிஎஸ் அணியினர் இன்று பல்வேறு புதிய குண்டுகளை போட்டுள்ளனர்.

சிகிச்சையை நிறுத்தச்சொன்னது யார்?
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் முன்னாள் சபாநாயகர் பிஎச்.பாண்டியன் மற்றும் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிஎச்.பாண்டியன் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையை நிறுத்தச்சொன்னது யார் என அவர் கேள்வி எழுப்பினார்.

குடும்ப உறுப்பினர்கள் சொன்னார்களா?
ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையை யாருடைய அனுமதியுடன் அப்பல்லோ மருத்துவர்கள் நிறுத்தினார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் நிறுத்தச் சொன்னார்களா என்றும் பி.எச். பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெ.கடுமையாக தாக்கப்பட்டார்
அவர் காயத்துடனே அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் பிஎச்.பாண்டியன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா போயஸ் கார்டன் இல்லத்தில் கடுமையாக தாக்கப்பட்டார் என்றும் அவர் கூறினார்.

எப்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்?
மேலும் ஜெயலலிதா எப்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எந்த நிலைமையில் என்று சேர்க்கப்பட்டார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பிஎச்.பாண்டியன் கேள்வி எழுப்பினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications