தென்காசி தொகுதி அதிமுக வேட்பாளர் யார்? எடப்பாடி பழனிசாமியிடம் 2 ஆப்ஷன்கள்!
தென்காசி: தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் யாரை நிறுத்துவது என்ற விவகாரத்தில் 2 ஆப்ஷன்களை கையில் வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
தென்காசி தொகுதி: தென்காசி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், ஸ்ரீவில்லிபுதூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி உள்ளன. கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதி என்பதால் இயற்கை எழில் கொஞ்சும் தொகுதியாக தென்காசி திகழ்கிறது. சுற்றுலாவும், விவசாயமும் தொகுதியின் பிரதான தொழிலாக பார்க்கப்படுகிறது.

சிட்டிங் எம்.பி.: இந்நிலையில் திமுக சார்பில் சிட்டிங் எம்.பி. தனுஷ்குமாரே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அதிகம் என்றாலும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தென்காசி மீது ஒரு கண் வைத்துள்ளன. இதனிடையே அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி எம்.பி. வேட்பாளராக நிறுத்தப்படலாம் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு மத்தியில் புதிய தமிழகம் அதிமுக கூட்டணியில் ஐக்கியமாகும் பட்சத்தில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு தென்காசி தொகுதி கொடுக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தென் தமிழகம்: இதனிடையே லோக்கல் அதிமுக பிரமுகர்கள் சிலர் தென்காசி தொகுதியில் அதிமுக தான் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை கட்சித் தலைமைக்கு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவு தான் இறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது. தென்காசி மக்களவைத் தொகுதியை பொறுத்தவரை தென் தமிழகத்தில் இருக்கும் ஒரே தனித் தொகுதியாகும். இதனால் அங்கு போட்டி சற்று வலுவாகவே இருக்கும்.
கூடுதல் தகவல்: அருகாமை மாவட்டங்களான நெல்லை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த பிரமுகர்களும் சீட் கேட்கக் கூடும் எனத் தெரிகிறது. முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமியை பொறுத்தவரை மீண்டும் 2026 சட்டமன்றத் தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிடவே விருப்பப்படுகிறார் என்பது கூடுதல் தகவலாகும்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications