மதுசூதனுக்கு எதிர்ப்பு? ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் யார் என்பதில் மல்லுக்கட்டு!
ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் யார் என்பதில் மல்லுக்கட்டு தொடங்கிவிட்டது.
Recommended Video

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக மதுசூதனன் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக ஓபிஎஸ்-எடப்பாடி அணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளராக முதலில் கே.பி. முனுசாமியை நிறுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கே.பி. முனுசாமி தயக்கம் காட்டியதால் மதுசூதனன் வேட்பாளராக்கப்பட்டார்.
அப்போது சசிகலா அணி வேட்பாளராக தினகரன் போட்டியிட்டார். பின்னர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது ஓபிஎஸ்- எடப்பாடி அணிகள் இணைந்த நிலையில் இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் டிசம்பர் 21-ந் தேதி ஆர்.கே.நகர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி தரப்பு நோ
இந்நிலையில் இரட்டை இலை சின்னம் கிடைத்திருப்பதால் ஆர்.கே.நகரில் கே.பி. முனுசாமி போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் எடப்பாடி தரப்பு மற்றொரு வேட்பாளரை நிறுத்தலாம் என ஆலோசிக்கிறதாம்.

ஓபிஎஸ் அட்வைஸ்
இதையடுத்து ஓபிஎஸ்ஸை மதுசூதனன் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது எடப்பாடியையும் சந்தித்து பேசுங்கள் என ஓபிஎஸ் கூறியிருக்கிறார். இதையடுத்து எடப்பாடியை நேற்று மதுசூதனன் சந்தித்து பேசினார்.

முனுசாமிக்கு எதிர்ப்பு
இச்சந்திப்பின் போது, அனைவரும் உட்கார்ந்து பேசி முடிவெடுக்கலாம் என நழுவிவிட்டாராம் எடப்பாடி. இது தொடர்பாக அதிமுக வட்டாரங்களில் விசாரித்த போது மதுசூதனனுக்கு பதிலாக வேறு ஒருவரை நிறுத்தலாம் என்பது எடப்பாடி அணியின் நிலை; கே.பி. முனுசாமியை நிறுத்தி வென்றுவிட்டால் அமைச்சர் பதவி கேட்பார் என்பதால் அவருக்கும் நோ சொல்கிறதாம்.

நழுவும் ஓபிஎஸ்
ஆனால் ஓபிஎஸ்ஸோ, நம்ம தலையை உருட்டாமல் இருந்தால் போதும் என நழுவல் போக்கில் இருக்கிறராம். இதனால் ஓபிஎஸ் அணிக்குள்ளேயே சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
தூய சக்தி என்றால் 3 எம்.எல்.ஏக்களையும் கட்சியை விட்டு நீக்கணும்.. விஜய்க்கு அன்புமணி வைத்த வேண்டுகோள் -
சிவி சண்முகத்துக்கு அடுத்த அடி. 5 அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவு.. யார் இவர்கள்? லிஸ்ட் -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
இன்பதுரை எடுத்த சுப்ரீம் ஆயுதம்? சபாநாயகர் போட்ட 5 நிமிட உத்தரவு! சுப்ரீம் கோர்ட்டில் சிக்கும் தவெக? -
"3 எம்.எல்.ஏக்களின் பதவி விலகலை 5 நிமிடத்தில் ஏற்றது ஏன்?” சபாநாயகருக்கு அதிமுக MP இன்பதுரை கேள்வி! -
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
10 வருடங்களில் 5 கட்சி.. மதுரை டாக்டர் சரவணன் கடந்து வந்த அரசியல் கட்சிகள் லிஸ்ட்! -
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா.. கைப்பட கடிதம் கேட்ட சபாநாயகர் -
அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்! -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்!












Click it and Unblock the Notifications