விஜயபாஸ்கர் கூட்டாளியான விழுப்புரம் திமுக பிரமுகரின் மகனுக்கும் டெல்லி குறி?
அமைச்சர் விஜயபாஸ்கரின் கூட்டாளியான விழுப்புரம் திமுக பிரமுகரின் மகனுக்கும் டெல்லி குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: வில்லங்க அமைச்சர் விஜயபாஸ்கரின் கூட்டாளியாக வலம் வந்த விழுப்புரம் திமுக பிரமுகரின் மகனுக்கும் டெல்லி குறிவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் ஆட்சிகளை மாறி மாறி அமைத்தாலும் அரசு சொத்துகளை சூறையாடுவதில் கூட்டணி அமைத்துதான் செயல்படுகின்றன. இதனால்தான் டெல்லியை எதிர்ப்பதில் திமுக ரொம்பவே பம்மி வருகிறது.

திமுகவை நோக்கியும்...
தற்போது அதிமுகவை மட்டுமே டெல்லி குறிவைத்து வேட்டையாடி வருகிறது. விரைவில் திமுக பக்கமும் டெல்லியின் பார்வை திரும்ப இருக்கிறது.

விழுப்புரம் பிரமுகர் மகன்
குறிப்பாக திமுக தலைமைக்கு நெருக்கமான மூவரணிக்கு முதல் குறி வைக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து விழுப்புரம் திமுக பிரமுகரின் மகனுக்கும் டெல்லி குறிவைத்திருக்கிறது.

விஜயபாஸ்கர் கூட்டாளி
விழுப்புரம் திமுக பிரமுகரின் மகன் ரியல் எஸ்டேட் மாஃபியா என்கிறது காவல்துறை வட்டாரங்கள். அமைச்சர் விஜயபாஸ்கர், ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் ஆகியோருடன் கூட்டணி அமைத்து செயல்பட்டிருக்கிறார் விழுப்புரம் திமுக பிரமுகர் மகன்.

டெல்லி வலை
நாமக்கல்லில் தற்கொலை செய்து கொண்ட ஒப்பந்தாரர் சுப்பிரமணியத்தைப் போலவே விஜயபாஸ்கருக்கு மிகவும் நெருக்கமானவராக வலம் வந்திருக்கிறார் விழுப்புரம் பிரமுகரின் மகன். குறிப்பாக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் அடைக்கப்பட்டிருந்தபோது விஜயபாஸ்கருடன் தங்கி கூத்தடித்தவர்களில் இந்த பிரமுகர் மகனும் ஒருவராம். இவருக்கு டெல்லி வலை விரித்து காத்திருக்கிறது என்பது லேட்டஸ்ட் தகவல்.












Click it and Unblock the Notifications