அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி... பரபர பின்னணி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கைது செய்யப்பட்ட அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாவிடம் விடிய விடிய விசாரணை- வீடியோ

  விருதுநகர்: ஆசிரியரின் மகளாக பிறந்து பேராசிரியராக பணியில் சேர்ந்த நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளை தவறான வழிநடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

  அருப்புக்கோட்டையில் உள்ள சொக்கலிங்கபுரத்தில் பிறந்த நிர்மலா தேவியின் தந்தை பரமசிவம் தனியார் பள்ளியில் ஓய்வு பெற்ற ஆசிரியர். 46 வயதாகும் நிர்மலாதேவி, எம்எஸ்சி எம்பில் பிஎச்டி படித்துள்ளார்.

  தேவாங்கர் நடுநிலைப் பள்ளியில் ஆரம்ப கல்வியும், தோவாங்கர் மகளிர் பள்ளியில் மேல்நிலைக் கல்வியும் படித்துள்ளார்.

   மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

  மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

  தேவாங்கர் கலைக் கல்லூரியில் இளங்கலை முதுகலை படிப்பும் பயின்றதோடு காமராஜர் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து அவர் பயின்ற தேவாங்கர் கலைக் கல்லூரியில் கடந்த 3-01-2008 ம் நாளில் உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி பேராசிரியையாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

  குடும்பத்தில் பிரச்சினை

  குடும்பத்தில் பிரச்சினை

  இவரது கணவர் சரவண பாண்டி. வெளிநாட்டில் பணிபுரிந்து விட்டு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் அருப்புகோட்டை சொக்கலிங்கபுரத்தில் வசித்து வருகிறார் சரவண பாண்டி. அருப்புக்கோட்டை நகராட்சி ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

  இரண்டு மகள்கள்

  இரண்டு மகள்கள்

  இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. முதல் மகள் தனியார் மருத்துவ கல்லூரியில் பிடிஎஸ் படித்து வருகிறார், இரண்டாவது மகள் 9ஆம் வகுப்பு பயின்று வருகிறார். மகள்கள் இருவரும் பேராசிரியையின் கணவர் கண்காணிப்பில் வாழ்ந்து வருகின்றனர்.

  மாணவிகளிடம் பேச்சு

  மாணவிகளிடம் பேச்சு

  கடந்த மார்ச் 14ம் தேதி இரண்டாம் ஆண்டு பயிலும் 4 மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் விதமாக வற்புறுத்தி தொலைபேசியில் பேசிய உரையாடல் வாட்ஸ் அப்பில் வெளியானதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்திடம் 4 மாணவிகள் புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் பேராசிரியை நிர்மலா தேவியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளது.

  பின்னணியில் யார்

  பின்னணியில் யார்

  மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். நிர்மலா தேவியின் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் வாய் திறக்கும் பட்சத்தில் பல்கலைக்கழகத்தில் உள்ள பல கருப்பு ஆடுகள் சிக்குவார்கள்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Professor Nirmala Devi of Devanga Arts College in Aruppukottai was arrested by the police on Monday. here is the biodata of Nirmaladevi.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற