திருமுருகன் காந்தியுடன் சிறைவாசம் அனுபவிக்கும் தமிழர் விடியல் கட்சி, காஞ்சி மக்கள் மன்ற நிர்வாகிகள்
மே 17 இயக்கம் திருமுருகன் காந்தியுடன் சேர்ந்து தமிழர் விடியல் கட்சி, காஞ்சி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
சென்னை: திருமுருகன் காந்தியுடன் சேர்ந்து சிறைவாசம் அனுபவிக்கும் டைசன், இளமாறன் இருவரும் தமிழர் விடியல் கட்சியை சேர்ந்தவர்கள். மற்றொருவரான அருண்குமார் காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்.
சென்னை மெரினாவில் ஆண்டுதோறும் மே 17 இயக்கம் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்படும். மெரினா கடற்கரையில் மாலைநேரத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு நினைவு அஞ்சலி செலுத்துவர்.
ஆனால் இந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்தது. இந்த தடையை மீறி தமிழ் உணர்வாளர்கள் பலரும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

திருமுருகன் காந்தி கைது
இவர்களில் மே 17 இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலரை தமிழக அரசு கைது செய்து சிறையிலடைத்தது. இந்நிலையில் திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் ஆகியோர் மீது அடுத்தடுத்து பல வழக்குகளைப் போட்டது தமிழக அரசு.

குண்டர் சட்டம்
இதன் உச்சமாக திருமுருகன் காந்தி மீது குண்டர்சட்டமும் பாய்ந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேரும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முத்துக்குமார் தீக்குளிப்பு
திருமுருகன் காந்தியின் தந்தை தொழிற்சங்கவாதி. முத்துக்குமார் தீக்குளிப்பைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய அரசியல் களத்துக்கு வந்தவர்.

நாம் தமிழரில் இருந்து விலகி
அதேபோல் டைசன், இளமாறன் இருவரும் நாம் தமிழர் கட்சியில் இருந்தனர். ஆனால் நாம் தமிழர்கட்சியின் பெரியார் எதிர்ப்பு பிரசாரத்தால் வெளியேறி தமிழர் விடியல் கட்சியைத் தொடங்கினர்.

காஞ்சி மக்கள் மன்ற அருண்
இவர்களைப் போல அருண்குமார் நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறி காஞ்சி மக்கள் மன்றத்துடன் இணைந்து பணியாற்றுகிறார். பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் விடுதலைக்காக தீக்குளித்து மாண்ட செங்கொடி, காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications