Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சத்யராஜ்ஜூடன் அர்ச்சனா.. வீடியோ காலில் நடந்த திடீர் சம்பவம்.. எப்படிதான் மனசு வந்துச்சோ.. அடக்கடவுளே

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: வழக்கம்போல் வேலைக்கு சென்ற அர்ச்சனா, அன்று மதியமே வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டார்.. கடைசியில் பார்த்தால், இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார்.. என்ன காரணம்?

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகில் உள்ளது மருதூர்.. இந்த பகுதியை சேர்ந்தவர் அர்ச்சனா.. 24 வயதாகிறது.. இவர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் எழில் நகரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இதனால், நன்னிலத்திலேயே தனியாக ஒரு வீடு எடுத்து தங்கி வந்துள்ளார்.. எப்பவுமே தன்னுடைய தோழியுடன்தான் ஆபீசுக்கு போவாராம்.

Who is this Sathyaraj and Why did his girlfriend suddenly take this decision near Mayiladuthurai

மதிய உணவு இடைவேளை: அப்படித்தான், கடந்த 12ம் தேதி காலை வழக்கம்போல் அர்ச்சனா வீட்டிலிருந்து கிளம்பி, தோழியுடன் ஆபீசுக்கு சென்றார்.. ஆனால், மதிய உணவு இடைவேளைக்கு செல்லவேண்டிய நேரத்திற்கு அரைமணி நேரம் முன்னதாகவே, தனக்கு வயிறு வலிப்பதாக சொல்லிவிட்டு, அர்ச்சனா மட்டும் வீட்டிற்கு சென்றுவிட்டார்.. பிறகு அன்று சாயங்காலம் டியூட்டி முடிந்தபிறகு, அர்ச்சனாவுக்கு உடல்நிலை எப்படி உள்ளது என்பதை தெரிந்துகொள்ள, அவரது தோழி வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார்.

அங்கே அர்ச்சனா ஃபேனில் சடலமாக தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி துடித்துள்ளார்.. பிறகு நன்னிலம் போலீசாருக்கு தகவல் தந்துள்ளார்.. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அர்ச்சனாவின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக, திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. உடனடியாக விசாரணையையும் துவங்கி, அர்ச்சனாவின் செல்போனையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர்... அதில் அர்ச்சனாவின் ஒரு வீடியோ கால் இருந்தது.

சத்யராஜ் எங்கே: கடைசியாக அந்த வீடியோகாலில்தான் அர்ச்சனா பேசியிருக்கிறார். சத்யராஜ் என்பவருடன் பேசியிருக்கிறார்... நாகை மாவட்டம் பஞ்சநதிகுளம் வடகாட்டை சேர்ந்தவர் சத்யராஜ்.. 26 வயதாகிறது. இதையடுத்து சத்யராஜை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போதுதான் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.. அர்ச்சனாவும் சத்யராஜூம் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் அர்ச்சனாவை திடீரென கழட்டிவிட்டுவிட்டு, சத்யராஜ் வேறு ஒரு பெண்ணுடன் பழகிவந்துள்ளார்..

இதனால் அர்ச்சனா சத்யராஜ் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.. தன்னை கைவிட வேண்டாம் என்று பலமுறை கதறி அழுதும் சத்யராஜ் கேட்கவில்லையாம்.. சம்பவத்தன்றும் இந்த மனவேதனையில்தான், சத்யராஜிடம் வீடியோகாலில் பேசியுள்ளார் அர்ச்சனா.. அப்போதும் சத்யராஜ் மனம் மாறாதால், தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார் அர்ச்சனா..

Who is this Sathyaraj and Why did his girlfriend suddenly take this decision near Mayiladuthurai

சத்யராஜ் கொடூரம்: இதையடுத்து அர்ச்சனாவை தற்கொலைக்கு தூண்டியதாக சத்யராஜ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... பல வருடமாக அர்ச்சனாவை காதலித்து வந்த சத்யராஜுக்கு, திடீரென அவரது சொந்தக்கார பெண்ணின் மீது காதல் வந்துள்ளது.. அதனால், அர்ச்சனாவுடனான தொடர்பை துண்டிக்க சத்யராஜ் முயற்சி செய்யவும்தான், அதை தாங்கி கொள்ள முடியாமல், கதறி அழுதுள்ளார் அர்ச்சனா.

இதில் கொடுமை என்னவென்றால், அர்ச்சனா வீடியோ காலில் சத்யராஜ்ஜூடன் பேசிக்கொண்டே தற்கொலையை செய்துள்ளார்.. கண்ணெதிரே அர்ச்சனா, ஃபேனில் தூக்கு போடுவதையும், அதில் தொங்கி துடிதுடித்து உயிரிழப்பதையும், வீடியோகாலில் பார்த்து ரசித்து கொண்டே இருந்தாராம் சத்யராஜ்.. சத்யராஜ் வீடியோ காலில் பார்த்து ரசித்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளதால், இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் இந்த விசாரணையை கையில் எடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+