திருச்சி மாநாட்டைப் பார்த்து இந்தியாவே பிரமிக்கிறது... ஆற்காட்டார் முழக்கம்
திருச்சி: திமுகவின் 10 மாநில மாநாடுகளில் மூன்று மாநாட்டிற்கு அண்ணா தலைமை தாங்கியிருக்கிறார். ஒரு மாநாட்டிற்கு நாவலர் தலைமை தாங்கியிருக்கிறார். ஆறு மாநாட்டிற்கு அண்ணன் கலைஞர்தான் தலைமையேற்றிருக்கிறார் இந்த 10வது மாநில மாநாடு இந்தியாவிலே இருக்கின்ற அனைவரும் பிரமிக்கும் வகையில் நடந்து கொண்டிருக்கிறது என்று திமுக மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
திருச்சியில் நேற்று தொடங்கிய 10வது திமுக மாநில மாநாட்டில் ஆற்காடு வீராசாமி விளக்க உரையாற்றினார்.
உடல் நலத்தை முன்னிட்டு நீண்ட காலமாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வரும் ஆற்காடு வீராசாமி, நேற்றைய மாநாடு குறித்தும், திமுக மாநில மாநாடுகள் குறித்தும் சிறு குறிப்பு வரைந்து விளக்கிப் பேசியது பலருக்கு, குறிப்பாக திமுகவின் இளைஞர் பட்டாளத்துக்கு நல்ல தகவல் தொகுப்பாக அமைந்தது.
வீராசாமியின் பேச்சி...

அண்ணா தலைமையில் முதல் மாநாடு
முதலாவது மாநில மாநாடு சென்னையிலே அறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்றது. இரண்டாவது மாநில மாநாடு நாவலர் தலைமையிலே திருச்சியிலே நடை பெற்றது.

வாக்குப் பெட்டி வைத்த அண்ணா
மூன்றாவது மாநில மாநாடு மதுரையிலே அண்ணா தலைமையில் நடைபெற்றது. அப்போது அண்ணா சொன்னார், நாட்டு மக்கள் வாக்களிப்பது பிறகு இருக்கட்டும். இந்த தேர்தலிலே போட்டியிலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்வதற்கு கூடியிருக்கும் கழக தோழர்கள் இங்கே வைக்கப்பட்டிருக்கும் பெட்டியிலே தங்களது விருப்பத்தை தெரிவியுங்கள்.

தேர்தலில் போட்டியிடுவதா.. வேண்டாமா
அப்படி கருத்து தெரிவித்தவர்கள் அதிகமாக இருந்த காரணத்தால், திராவிட முன்னேற்ற கழகம் தேர்தலிலே போட்டியிடும் என்று அறிவித்தார்.

5வது மாநாட்டில் கருணாநிதியின் ஐம்பரும் முழக்கங்கள்
ஐந்தாவது மாநில மாநாட்டிலே நமது கலைஞர் ஒப்பற்ற ஐம்பெரும் முழக்கங்களை தந்தார்.

மத்தியில் சுயாட்சி.. மாநிலத்தில் கூட்டாட்சி
1. அண்ணா வழியில் அயராது உழைப்போம்.
2. ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்.
3. இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்.
4. வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம்.
5. மாநிலத்தில் சுயாட்சி மத்தியிலே கூட்டாட்சி என்று முழங்கினார். அந்த முழக்கம்தான் தமிழ் நாடெங்கும் இதயகீதமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

திருச்சிக்கு இது 3வது மாநாடு
ஏழாவது மாநில மாநாடு கோவையிலே கண்ணப்பன் வரவேற்பு குழு தலைவராக இருக்க, தலைவர் கலைஞர் தலைமை தாங்கி நடத்தினார். திருச்சியிலே 8வது 9வது மற்றும் தற்போது இந்த 10வது மாநில மாநாட்டிற்கும் தலைமை ஏற்றிருக்கிறார் தலைவர் கலைஞர்.

இந்தியாவே பிரமிக்கிறது
10 மாநாட்டில் மூன்று மாநாட்டிற்கு அண்ணா தலைமைதாங்கியிருக்கிறார். ஒரு மாநாட்டிற்கு நாவலர் தலைமை தாங்கியிருக்கிறார். ஆறு மாநாட்டிற்கு அண்ணன் கலைஞர்தான் தலைமையேற்றிருக்கிறார் இந்த 10வது மாநில மாநாடு இந்தியாவிலே இருக்கின்ற அனைவரும் பிரமிக்கும் வகையில் நடந்து கொண்டி ருக்கிறது.

மாவட்ட மாநாடுகள் 56
திராவிட முன்னேற்றக்கழகம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 56 மாவட்ட மாநாடு நடைபெற் றிருக்கின்றன என்றார் ஆற்காடு வீராசாமி.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications