சசிகலா முதல்வராகக் கூடாது என அத்தனை தெய்வங்களையும் தமிழகம் வேண்டியது - டி.ஆர்.!
சசிகலா முதல்வராகக்கூடாது என்று தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரும் அனைத்து தெய்வங்களையும் வேண்டினார்கள் என்று டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக இருந்த சசிகலா முதல்வராக பதவியேற்கக்கூடாது என்று தமிழக மக்கள் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களின் கடவுள்களிடம் பிரார்த்தனை செய்தனர். அது பலித்து விட்டது என்று டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், தான் ஒருமுறை கூட சசிகலாவை நாடி சென்றதில்லை என்றார். சசிகலா முதல்வராகக்கூடாது தான் முன்பே பகிரங்கமாக பேட்டி அளித்ததாகவும் தெரிவித்தார்.

ஜாதகம் சாதகமா?
பிப்ரவரி 7ஆம் தேதியன்று டி.ராஜேந்தர் வெளியிட்ட அறிக்கையில் சசிகலாவை கடுமையாக சாடியிடுந்தார். அந்த அறிக்கையில், ஜாதகம் இடம் கொடுத்தால், சாமியறையில் சாம்பிராணி போடும் சாதாரண பெண்மணியை கூட ஆக்கிவிடும் சாம்ராஜ்யம் ஆளும்படி, அது தான் ஜாதக கட்டம். மாண்புமிகு ஆக இருக்கும் சிசகலா அம்மையாருக்கு, அவரது ஜாதகம் தற்போதைக்கு செய்யலாம் சாதகம், இது தமிழ்நாட்டுக்கு சாதகமா? பாதகமா? பொறுத்திருந்து பார்ப்போம் என்று கேட்டிருந்தார்.

தமிழ்நாட்டிற்கு விமோசனம்
அ.தி.மு.க பொதுக்குழு, சசிகலா அம்மையாரை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்து ஆக்கியது சின்னம்மா.இப்போது அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை முதல்வராக தேர்ந்தெடுத்து ஆக்கியிருக்கிறார்கள் தமிழ் நாட்டுக்கு சி.எம். மா. முதல்வராக மாண்புமிகு ஆவதற்கு சசிகலா அம்மையாரை அழைக்கிறது சட்டமன்றம். ஆனால் ஜெ. அம்மாவுக்குத்தானே ஓட்டுப்போட்டோம், இவர் எப்படி முதல்வராகலாம், என்று முகம் சுளிக்கிறது... பெரும்பகுதியான மக்கள் மன்றம். யார் வேண்டுமானாலும் செய்யலாம் விமா்சனம், ஆனால் ஆண்டவன் நினைத்தால் தான் தமிழ்நாட்டிற்கு விமோச்சனம் என்று கேட்டிருந்தார்.

முதல்வராக முடியலையே
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், சசிகலா ஒருமணி நேரம் கூட முதல்வராக அமரமுடியாது தான் கூறியதாக தெரிவித்தார். ஜாதகம் சசிகலாவிற்கு சாதகமில்லை என்றும் டி.ராஜேந்தர் கூறினார். தான் ஒருமுறை கூட சசிகலாவை நாடி அவரது வீட்டிற்கு சென்றதில்லை என்றும் தெரிவித்தார்.

மக்கள் பிரார்த்தனை
சசிகலா முதல்வராகக்கூடாது தமிழகத்தில் உள்ள பல சமுதாய மக்களும் அவரவர்களின் தெய்வங்களிடம் பிரார்த்தனை செய்தனர். அந்த பிரார்த்தனைதான் இப்போது பலித்துள்ளது. தமிழகம் தப்பித்து விட்டது என்றும் கூறியுள்ளார் டி. ராஜேந்தர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications