பணத்தட்டுப்பாடு பின்னணியில் உள்ள பகீர் காரணங்கள் இவைதான்!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஏடிஎம்களில் பணம் கிடைக்காமல் காலை முதல் மக்கள் அலைமோதுகிறார்கள்- வீடியோ
சென்னை: கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டிதான், நாடு முழுக்க ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி பல மட்டங்களிலும் எழுந்துள்ளன.
நாட்டின் பல பகுதிகளிலும் ஏடிஎம்களில் பணம் கிடைக்காமல் காலை முதல் மக்கள் அலைமோதுகிறார்கள். பொருளாதார அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டார்களோ என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சந்தேக கேள்வி எழுப்பும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.

திடீரென பணத்தேவை அதிகரித்துவிட்டதுதான் இதற்கு காரணம் என்றும், அதை சரி செய்துவிடுவோம் என்றும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
பணத்தட்டுப்பாடு ஏற்பட சில முக்கிய காரணங்களாக முன் வைக்கப்படுபவை இவைதான்:
- டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் வங்கிகளுக்கு வழங்கும் பணத்தின் அளவை ரிசர்வ் வங்கி குறைத்ததாக கூறப்படுகிறது.
- பல வட மாநில வங்கிகளில் பணம் எடுக்கும் விகிதம் டெபாசிட் செய்யும் அளவை விட அதிகமாக உள்ளது. 2018 மார்ச் நிலவரப்படி, வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யும் விகிதம் 6.7 சதவீதமாக இருந்தது. அதுவேர 2016-17ம் நிதியாண்டின் இக்காலகட்டத்தில் 15.3 சதவீதமாக இருந்தது.
- புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ரூ.500, ரூ.2000 போன்ற நோட்டுகளை ஏடிஎம்களில் செலுத்துவற்கான தொழில்நுட்ப வசதி இன்னும் பல ஏடிஎம்களில் முறையாக மேற்கொள்ளப்படவில்லையாம். இதனால் புதிய நோட்டுகளை ஏடிஎம்களில் நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
- எந்தப் பகுதிக்கு அதிகமான பணம் வழங்க வேண்டும் என்ற முன்யோசனையின்றி தேவையற்ற பகுதிகளில் அதிக பணமும் தேவையுள்ள பகுதிகளில் குறைந்த பணமும் நிரப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் மக்கள் அச்சம் காரணமாக, வங்கிகளில் டெபாசிட் செய்வதை குறைத்துக்கொண்டு கையில் அதிக ரொக்கத்தை இருப்பு வைக்க தொடங்கியுள்ளதும், ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட காரணமாம்.
- கர்நாடகாவில் மே 12ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலையொட்டி, ஏடிஎம்களில் இருந்த பணம் பதுக்கப்பட்டுள்ளது என்று ஒரு புகார் பல மட்டங்களிலும் எழுந்துள்ளது. திடீரென பணத்தேவை அதிகரித்துள்ளதாக ஜேட்லி கூற காரணம் என்ன என்ற கேள்வியை குற்றம்சாட்டுவோர் முன் வைக்கிறார்கள்.
More From
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications