மயிலாடுதுறை: ராகுல் காந்தி களமிறக்கும் பிரவீன் சக்கரவர்த்திக்கு 'மண்ணின் மைந்தர்கள்' எதிர்ப்பு!
மயிலாடுதுறை: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியால் மயிலாடுதுறை லோக்சபா தொகுதியில் களமிறக்கப்படுகிறவர் பிரவீன் சக்கரவர்த்தி. ஆனால் ஒவ்வொரு முறையும் உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறி பிரவீன் சக்கரவர்த்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் காங்கிரஸ் பிரமுகர்கள். இதனால் மயிலாடுதுறை லோக்சபா தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி நீடிக்கிறது.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் தமிழ்நாடு- புதுவையில் காங்கிரஸ் மொத்தம் 10 இடங்களில் போட்டியிடுகிறது. தமிழ்நாட்டில் 9 தொகுதிகளிலும் புதுச்சேரியிலும் போட்டியிடுகிறது காங்கிரஸ்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளில் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். ஆனால் மயிலாடுதுறை, திருநெல்வேலி லோக்சபா தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
இது தொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்களில் பேசிய போது, காங்கிரஸ் மேலிடத்தால் டேட்டா அனாலிசிஸ் துறைக்கு என நியமிக்கப்பட்டவர் பிரவீன் சக்கரவர்த்தி. தமிழ்நாட்டில் பிறந்தவர்தான் பிரவீன் சக்கரவர்த்தி. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோருடன் இணைந்து பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர். ராகுல் காந்தியின் வலதுகரமாக செயல்படக் கூடியவர்களில் ஒருவர். இவரைத்தான் மயிலாடுதுறை வேட்பாளராக அறிவிக்க இருந்தது காங்கிரஸ் மேலிடம். மயிலாடுதுறையில் வேறு பகுதியை சேர்ந்த மணிசங்கர் அய்யர் பலமுறை போட்டியிட்டு வென்றும் இருக்கிறார். இதனால் எப்போதுமே உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்கிற குமுறல் இருந்தது. இம்முறையும் பிரவீன் சக்கரவர்த்தியை களமிறக்கிவிட்டால் தங்களுக்கு வாய்ப்பே கிடைக்காதா? என குமுறினர் காங்கிரஸ் பிரமுகர்கள். கடந்த காலங்களை விட இம்முறை கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் இந்த பிரமுகர்கள். இதனால் பிரவீன் சக்கரவர்த்தியின் பெயரை அறிவிக்கவில்லையாம் காங்கிரஸ் மேலிடம்.
அத்துடன் பட்டுக்கோட்டை ராஜேந்திரன், சிட்டிங் எம்.எல்.ஏ. ராஜ்குமார், மணிசங்கர் அய்ய, அவரது மகள், திருச்சி சிட்டிங் எம்பி திருநாவுக்கரசர் என பலரும் மயிலாடுதுறை தொகுதிக்கு முட்டி மோதுகின்றனராம். இத்தகைய பின்னணியில்தான் மயிலாடுதுறை லோக்சபா தொகுதிக்கான வேட்பாளர் பெயரை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மயிலாடுதுறை லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் கட்சி 11 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 3 முறை, அதிமுக 2 முறை வென்ற தொகுதி மயிலாடுதுறை.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications