வீட்டை விட்டே வெளியே வரலையாமே.. என்ன ஆச்சு எடப்பாடி பழனிசாமிக்கு.. ஓ இதுதான் காரணமா?
சென்னை: சமீபத்தில் நடந்த அதிமுக போராட்டம் எதிலும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளாதது கடும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் ஆளுநர் ஆர். என் ரவியை அவரது இல்லத்தில் சந்தித்தார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. மதுபான - கள்ளச்சாராய மரணங்கள் குறித்து புகார் மனுவோடு சென்று எடப்பாடி, ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்தார். இதற்காக அதிமுகவினர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றதால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே விழுப்புரத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், ராஜவேல்(38) என்பவர் விழுப்புரத்தில் பலியாகி உள்ளார்.

இது போக தஞ்சாவூர், கீழவாசல் பகுதியில் உள்ள அரசு அனுமதிக்கப்பட்ட பாரில் மது அருந்திய இரண்டு பேர் மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் அருந்திய மதுவில் சையனைடு கலந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கள்ளச்சாராய மரணங்கள் குறித்து புகார் மனுவோடு சென்று எடப்பாடி, ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்தார். இதற்காக அதிமுகவினர் இன்று ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றதால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக பேரணி காரணமாக சென்னையில் அண்ணா சாலை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் பெரும் போக்குரத்து நெரிசல் ஏற்பட்டது. கடும் வெயிலில் 12க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர். அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்ற பின் அவர் நடத்தும் மிகப்பெரிய போராட்டமாக இது பார்க்கப்படுகிறது.
மாவட்ட போராட்டம்: இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமி போராட்டம் முடிந்ததும் மாவட்ட அளவிலான போராட்டம் நடக்கும் என்று அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்டது. கள்ளச்சாராய மரணங்களை எதிர்த்து மாவட்ட அளவில் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 29ம் தேதி தமிழ்நாடு முழுக்க இதற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதிமுக மாவட்ட செயலாளர்கள் சார்பில் பிரம்மாண்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.
கலந்து கொள்ளவில்லை: ஆனால் இந்த போராட்டங்கள் எதிலும் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. சேலத்தில் நடக்கும் போராட்டத்தில் அவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை.
வேறு மாவட்டங்களிலும் முக்கிய தலைவர்கள் போராட்டங்களில் கலந்து கொண்டனர். ஆனால் போராட்ட நாளில் எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை வீட்டை விட்டு கூட வெளியே வரவில்லை. அவர் ஏன் வீட்டிற்கு உள்ளேயே முடங்கினார். ஏன் செய்தியாளர்களை கூட சந்திக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
இடையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் ரெய்டு நடக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நடக்கும் ரெய்டுகள் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இந்தியாவில் நடந்த பெரிய ரெய்டுகளில் ஒன்றாக.. நீண்ட ரெய்டுகளில் ஒன்றாக இந்த ரெய்டுகள் பார்க்கப்படுகின்றன.

அவருக்கு நெருக்கமான ஒருவரையும் விடாமல் வருமான வரித்துறை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது முக்கியமாக அரசு ஒப்பந்ததாரர்கள் மீது வருமானவரித்துறை ரெய்டு நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் ஒப்பந்தம், மின்சாரத்துறையில் ஒப்பந்தம் மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்கள் முதலில் 40ல் தான் ரெய்டு நடந்தது. அவரின் தம்பி அசோக் வீட்டில் 2 நாட்கள் மட்டுமே ரெய்டு நடந்தது.ஆனால் முதல் நாளே 40 இடங்கள் 200 இடங்களாக உயர்த்தப்பட்டது.
ஆனால் இந்த மிகப்பெரிய ரெய்டு குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி பேசவில்லை. அவர் ஏன் வெளியே வரவில்லை என்று அவருக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம். அவர்கள் நம்மிடம் தெரிவித்த தகவலின்படி எடப்பாடி பழனிச்சாமிக்கு உடல்நிலை சரியில்லை. அவருக்கு உடல் வலியும் கடுமையாக உள்ளது. இதனால் அவர் சிகிச்சை எடுப்பதற்காக ஓய்வு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications