கலைஞர் அறிவாலயத்தில் நடந்த மிஸ் கூவாகம் போட்டி.. கூண்டோடு புறக்கணித்த கலெக்டர், எஸ்பி.!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் நடந்த கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் திருவிழாவில் அமைச்சர்கள், அதிகாரிகள் என யாரும் பங்கேற்கவில்லை. இதனால் திருநங்கையர் மத்தியில் வருத்தம் நிலவியது.
கூத்தாண்டவர் கோவிலில் வருடா வருடம் நடைபெறும் சித்திரைத் திருவிழா அகில இந்திய அளவில் பிரசித்தி பெற்றது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த திருநங்கையரும், வெளிநாட்டினரும் கூட பங்கேற்கிறார்கள். லட்சக்கணக்கானோர் கூடி இந்த திருவிழாவை சிறப்பிக்கின்றனர்.

வருடா வருடம் இந்த திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. சித்திரைத் திருவிழாவின்போது கூவாகம் கிராமமே திருவிழாக் கோலம் பூண்டு காணப்படும். மேலும் விழுப்புரத்திலும் விடுதிகள் நிரம்பி வழியும். எங்கு பார்த்தாலும் திருநங்கையர் கூட்டமாகவே காணப்படும்.
மிஸ் கூவாகம் அழகிப் போட்டி, பேஷன் போட்டி உ்ளிட்ட போட்டிகளும் நடத்தப்படுகிறது. இதை சமூக நலத்துறைதான் நடத்துகிறது. இந்த முறை சமூக நலத்துறை அமைச்சர் வர்மதி, ஊரகத் தொழில்துறை அமைச்சர் மோகன் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் வரவில்லை. அதிகாரிகளும் யாரும் வரவில்லை.

மிஸ் கூவாகம் அழகிப் போட்டியிலும் கலெக்டர் சம்பத், எஸ்.பி. நரேந்திரன் நாயர் ஆகியோர் வரவில்லை. இந்தப் போட்டி நடந்த இடம் விழுப்புரம் கலைஞர் அறிவாலய அரங்கு என்பதால்தான் அவர்கள் வரவில்லை என்று கூறப்படுகிறது. மாவட்ட திமுக தலைமை அலுவலகம்தான் கலைஞர் அறிவாலயம் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா திருநங்கையர் நலனுக்கான தனி நபர் மசோதாவைக் கொண்டு வந்து அது நிறைவேறியது. இதனால் திமுக மீது திருநங்கையர்களுக்கு பெரும் அபிமானம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விழுப்புரத்தில் நடந்த விழாவும் திமுக அலுவலகத்தில் நடந்ததால் அதிமுக தரப்பில் கடும் அதிருப்தியுடன் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால்தான் இந்த ஆண்டு கூத்தாண்டவர் விழாவுக்கு அமைச்சர்களோ, அதிகாரிகளோ வராமல் புறக்கணித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications