தனிக்கட்சி அல்ல தனி அமைப்பு: அழுத்தம் திருத்தமாக திரும்ப திரும்ப தினகரன் கூறுவது ஏன்?

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பது அரசியல் கட்சி அல்ல, அது ஒரு அரசியல் அமைப்பு என்று தினகரன் திரும்ப திரும்ப கூறுவதற்கான காரணம் இதுதானா.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    டிடிவி தினகரன் அமைப்பின் பெயர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்- வீடியோ

    சென்னை: தினகரன் அறிவித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பது அரசியல் அமைப்பு என்று கூறுவதற்கு காரணம் ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக தினகரன் தனி அமைப்பை தொடங்க திட்டமிட்டார். பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று மதுரையில் தனது அமைப்பின் பெயரை அறிவித்துவிட்டார்.

    ஆனால் நிருபர்கள் அரசியல் கட்சி என்ற போதெல்லாம், தவறு இது அரசியல் கட்சியல்ல , அரசியல் அமைப்பு என்று அழுத்தம் திருத்தமாக கூறி வருகிறார்.

    திரும்ப திரும்ப கூறுவது ஏன்?

    திரும்ப திரும்ப கூறுவது ஏன்?

    இதுபோல் தினகரன் தான் தொடங்கியது அரசியல் கட்சி அல்ல, அரசியல் அமைப்பு என்று கூறியதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுந்தது. இந்த காரணத்தை பார்த்தபோதுதான் தினகரன் எத்தனை அழகாக காய் நகர்த்துகிறார் என்பது கண்கூடு.

    து.பொது.செ. பதவி காலியாகிவிடும்

    து.பொது.செ. பதவி காலியாகிவிடும்

    தினகரன் தனிகட்சி தொடங்கினால் இதில் எடப்பாடி தரப்புக்குத்தான் லாபம் என்பது தினகரனுக்கு நன்றாகவே தெரியும். தனி கட்சி தொடங்கினால் சசிகலாவால் அதிமுக துணை பொதுச் செயலாளர் என்று நியமிக்கப்பட்ட பதவி பறிபோய்விடும்.

    தகுதி நீக்க வழக்கு

    தகுதி நீக்க வழக்கு

    அதிமுகவை மீட்பது என்பது தினகரனுக்கு எட்டாக்கனியாகிவிடும். மேலும் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கும் எடப்பாடி அணிக்கு சாதகமாகவே முடிந்துவிடும். இதை உணர்ந்தே தினகரன் தனி கட்சி தொடங்கினால் நாங்கள் அதில் இணையமாட்டோம் என்று தங்கதமிழ் செல்வன் கூறியிருந்தது நினைவுக்கூரத்தக்கது.

    திரும்ப திரும்ப...

    திரும்ப திரும்ப...

    தனி கட்சி தொடங்கினால் முழு பலனை எடப்பாடி அணியே அனுபவிக்கும் என்பதை நன்கு அறிந்து கொண்டு தனி அமைப்பு என்று தினகரன் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி வருகிறார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+