கடைசி வரை நேசித்தார்.. கார் ஏற்றிக் கொலையும் செய்தார்.. கடைசியில் தானும் செத்தார்!
சென்னை: நான் ஆசிரியை நிவேதாவை கடைசி வரைக்கும் நேசித்தேன். எத்தனையோ உதவிகள் செய்துள்ளேன். அவர் துரோகம் செய்து விட்டார். அதனால்தான் கொலை செய்தேன் என்று கைது செய்யப்பட்டுள்ள தீயணைப்புப் படை வீரர் இளையராஜா கூறியுள்ளார். கடைசியில் இன்று இளையராஜாவும் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.
தமிழகம் மீண்டும் ஒரு கள்ளக்காதல் கொலையைக் கண்டுள்ளது. கோவையைச் சேர்ந்த ஆசிரியை நிவேதா என்பவரை அவரது கள்ளக்காதலர் இளையராஜா என்பவர் சென்னையில் வைத்து கார் ஏற்றிக் கொன்று விட்டார். இந்த சம்பவத்தில் நி்வேதாவின் இன்னொரு காதலரானா கணபதி என்பவர் உயிர் தப்பியுள்ளார்.
இருவரையும் கொல்வதே தனது திட்டமாக இருந்ததாகவும், ஆனால் கணபதி தப்பி விட்டதாகவும் இளையராஜா வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது வாக்குமூலத்திலிருந்து:

6 வருடமாக
நானும் நிவேதாவும் 6 வருடமாக சேர்ந்து வசித்தோம். அவருக்கு கணவர் இல்லை, பிரிந்து விட்டார். நிவேதாவின் தாயாருக்கு நான் நிறைய உதவி செய்துள்ளேன். அதுதான் நிவேதாவை என் பக்கம் ஈர்த்தது. என்னை நேசிக்க ஆரம்பித்தார்.

அன்புக்கு ஏங்கியவர்
நிவேதா அன்புக்கு ஏங்கியவர். அதை நான் கொடுத்தேன். இருவரும் நேசத்துடன் பழகினோம். அப்போது எனக்குத் திருமணமாகவில்லை. குடும்பச் சூழல் காரணமாக நான் திருமணம் செய்ய நேர்ந்தபோதும் கூட நிவேதாவை நான் விடவில்லை. தொடர்ந்து நேசித்தேன். அவரும் அப்படித்தான்.

குறுக்கே வந்த கணபதி
இந்த நிலையில்தான் கணபதி குறுக்கே வந்தார். பேஸ்புக் மூலமாக பழகினார். அது காதலாக மாறிப் போனது. அதேசமயம், ஆசை வார்த்தைகளைக் கூறி நிவேதாவை ஏமாற்றி அவர் பணம் பறித்து வந்தார். இதை நான் அவருக்கு பலமுறை எடுத்துச் சொல்லியும் அவர் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

அவருக்குப் புரியவில்லை
நான் சொன்னது அவருக்குப் புரியவில்லை. சென்னைக்கு தனது மகளைப் பார்க்க வந்த அவர் கணபதியையும் பார்க்க வேண்டும் என்றார். குட்பை சொல்லி விட்டு வந்து விடு என்று சொல்லித்தான் கூட்டி வந்தேன். ஆனால் வந்த இடத்தில் அவருடன் இவர் காட்டிய நெருக்கம் என்னை அதிர வைத்தது. இதனால்தான் காரை ஏற்றி விட்டேன்.

கடைசி வரை நேசித்தேனே
அதில் நிவேதா இறந்து விட்டார். கணபதி தப்பி விட்டார். கடைசி வரை நான் நிவேதாவை நேசித்தேன். ஆனால் அவர் செய்த துரோகம் என்னை கோபப்படுத்தி விட்டது. அதனால்தான் கொன்றேன் என்று கூறியுள்ளார் இளையராஜா. இவ்வாறு வாக்குமூலம் கொடுத்திருந்த இளையராஜா இன்று புழல் சிறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து விடடார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications