போயஸ் கார்டனுக்குள் ஐடி அதிகாரிகள் டீம் நுழைந்தது ஏன்? பரபர தகவல்கள்
போயஸ் கார்டனுக்குள் ஐடி அதிகாரிகள் டீம் ஏன் நுழைந்து 2 அறைகளை சீல் வைத்தது என்பது தொடர்பாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: மறைந்த ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களாவில் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்தது ஏன் என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக அரசின் தலைமை செயலராக இருந்த ராமமோகன் ராவ் மற்றும் அவரது மகன் ஆகியோரது வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தினர். இதில் பணம் மற்றும் தங்க கட்டிகள் சிக்கின.
வருமானத்துக்கு அதிகமாக பல நூறு கோடி ரூபாய் சொத்துகளை வாங்கி குவித்த ஆவணங்களும் பிடிபட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து ராமமோகன் ராவ், அவரது மகன் விவேக் ஆகியோர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

சீல் வைப்பு
ஆனால் இருவரும் வருமான வரித்துறையின் விசாரணைக்கு செல்லாமல் நாடகமாடி வருகின்றனர். இதனிடையே போயஸ் கார்டன் பங்களாவில் 2 அறைகளுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்ததாக கூறப்பட்டது.

ராமமோகன் ராவ் பயன்படுத்தியவை..
அந்த 2 அறைகளும் ராமமோகன் ராவ் கேம்ப் ஆபீஸ் போல போயஸ் கார்டனில் பயன்படுத்தியவை என்கின்றன வருமான வரித்துறை வட்டாரங்கள். அந்த அறைகளை முதலில் சீல் வைத்துவிட்டுச் சென்றனர் வருமான வரித்துறை அதிகாரிகள்.

ஆவணங்கள், லேப்டாப்
பின்னர் மீண்டும் போயஸ் கார்டனுக்குள் சென்று அந்த 2 அறைகளில் இருந்து முதலில் ஆவணங்களை எடுத்துச் சென்றனர். பின்னர் 2-வது முறையாகவும் போயஸ் கார்டனுக்குள் நுழைந்து ஒரு லேப்டாப்பையும் அந்த அறையில் இருந்து கைப்பற்றிச் சென்றனராம் வருமான வரித்துறை அதிகாரிகள்.

அதிர்ச்சியில் மன்னார்குடி தரப்பு
போயஸ் கார்டனின் கதவையும் வருமான வரித்துறை அதிகாரிகள் தட்டியிருப்பதாலேயே மன்னார்குடி தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளதாம். இதனால் தான் பொதுச்செயலர் ஆவதில் ரொம்பவே தயக்கம் காட்டுகிறார் சசிகலா என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications