'ஜெ. நன்றாக இருக்கிறார்... பேனாவை பிடித்து கையெழுத்திட மட்டும் முடியவில்லை'
முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார்... அவரது கை வழியாக மருந்துகள் செலுத்தப்பட்ட காரணத்தால் பேனாவை பிடிக்க முடியாமல் பெருவிரல் ரேகை வைத்தார் என அரசு பொது மருத்துவமனை மருத்துவர் பாலாஜி தெரிவித்துள்ளார
சென்னை: முதல்வர் ஜெயலலிதா நலமடைந்துவிட்டார்.... கை வழியாக மருந்துகள் செலுத்தப்பட்டதால் பேனாவை பிடித்து கையெழுத்திட முடியாமல் வேட்பாளர்களுக்கான படிவத்தில் பெருவிரல் ரேகையை வைத்தார் என சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவர் பி. பாலாஜி கூறியுள்ளார்.
அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களில் அதிமுக பொதுச்செயலர் என்ற அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதா 2 படிவங்களில் கையெழுத்திட வேண்டும். ஆனால் ஒரு படிவத்தில் ஜெயலலிதா பெருவிரல் ரேகையை வைத்திருந்தார். இதனால் அவரது உடல்நலம் குறித்தும் சட்டப் பிரச்சனைகள் குறித்தும் சர்ச்சைகள் எழுந்தன.

ஆனால் ஜெயலலிதாவின் பெருவிரல் ரேகையை ஏற்கலாம் என தேர்தல் ஆணையம் ஒப்புதல் தெரிவித்தது. இதனிடையே பெருவிரல் ரேகை மட்டுமே வைக்கும் நிலையில்தானா ஜெயலலிதா உடல்நலம் இருக்கிறது என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு ஜெயலலிதாவிடம் பெருவிரல் ரேகையைப் பெற்ற சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர் பாலாஜி அளித்த விளக்கம்:
ஜெயலலிதா நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். அவரால் எழுந்து உட்கார முடிகிறது. அவர் என்னிடம் நன்றாகவே பேசினார்.
ஜெயலலிதாவுக்கு கைகள் வழியாகவே மருந்துகள் செலுத்தப்படுகின்றன. இதனால் கை வலி அதிகமாக இருக்கிறது. பேனாவை பிடித்து கையெழுத்திட அவரால் முடியவில்லை. ஆகையால் பெருவிரல் ரேகையை வைத்தார். முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலமுடன் வீடு திரும்புவார்.
இவ்வாறு மருத்துவர் பாலாஜி கூறியுள்ளார்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications