குமரி மக்கள் கொந்தளிக்க என்ன காரணம்?
Recommended Video

நாகர்கோவில்: ஓகி புயலால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் கன்னியாகுமரி மாவட்டம்தான் பெரும் சேதத்தை சந்தித்து இருக்கிறது .
புயலுக்கு பின் நான்கு நாட்களில் மின்சாரம் மீண்டு டும் என்று அறிவித்து இருந்ததால் மக்கள் நம்பிக்கையோடு ஒரு வாரம் காத்திருந்தும் பல இடங்களில் மின்சாரம் மீண்டு வரவில்லை. ஒரு வாரம் கடந்து விட்டதால் மக்கள் கொந்தளித்து ராஜாவூர், ராமன்புதூர், கார்மல் நகர் போன்ற இடங்களில் சாலை மறியலில் ஈடுபட தொடங்கினர்.
இந்த நிலையில் மக்களை எரிச்சலுக்குள்ளாக்கும் வகையிலான அறிவிப்பை வெளியிட்டது மாவட்ட நிர்வாகம். வியாழக்கிழமை முதல் பள்ளிகள் மீண்டும் செயல்படும் என்று குமரி மாவட்ட கலெக்டர் அறிவித்தது அந்த மக்களிடம் ஒருவித எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியதால் தான் சாலை மறியல்கள் வெடித்Lன.

மக்களை ஏமாற்றும் முயற்சியா
காரணம், மின்சாரம் சீராகவில்லை, குடிநீர் கேன் தேடி ஓடும் நிலை, குளிக்க நீரில்லை, இப்படியான சூழ்நிலையில் மக்கள் தவித்து கொண்டிருக்கும் வேளையில் நிலைமை சீரானது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் விதமாகவே இந்த பள்ளி திறப்பை மக்கள் பார்க்கிறார்கள். அப்படி என்ன அவசரம் பள்ளிகத் திறக்க, திங்கள்கிழமை திறந்திருக்கலாமே என்பது மக்கள் கருத்து.

பரீட்சைக்கு எப்படி படிக்க முடியும்
இதில் குழந்தைகளுக்கு அரையாண்டு பரீட்சை ஆரம்பம். இருட்டில் இருந்து கொண்டு எப்படி படிக்க முடியும் என்று பெற்றோர்கள் கேள்வி ட்பது நியாயம் தானே . மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாமலே திரும்பும் முன்னரே பள்ளி கல்லூரிகளைத் திறந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டதாக செய்தி பரப்பி ஒரு மாயையை உருவாக்க முயற்சி செய்யும் அரசின் ஏமாற்று வேலையாக மக்கள் இதனை பார்க்கின்றனர்.

அழிந்த மரங்களின் எண்ணிக்கை தெரியாத அரசு
குமரியின் ஒவ்வொரு ஊரிலும் பல ஆயிரம் மரங்கள் வேரோடு வீழ்ந்து கிடக்கதமிழகத்தின் முதல்வரோ குமரி, நெல்லை, தூத்துக்குடி அத்தனைக்கும் சேர்த்து ஐநூற்றி சொச்சம் மரங்கள் வீழ்ந்ததாக எண்ணிக்கை காட்டுகிறார். அதில் முன்னூற்றி சொச்சத்தை சரிப்படுத்தி விட்டதாகவும் தகவல். பாவம் அந்த ஊர் மக்களுக்கு மின்சாரம் வராததால் இந்தசெய்திகளை அவர்களால் பார்க்க முடியவில்லை. எல்லாம் மேலோட்டமாக பேசுவதையும் மீட்பு பணிகள் வீறுகொண்டு நடைபெறுவதாகவும் பேசும் இந்த விந்தையான தகவல் அவர்களை சேரும் வாய்ப்புகள் குறைவு. மின் கம்பிகள் சீரமைக்கும் பணிக்கு வெளி மாவட்டங்களில் இருந்து கூட மின் ஊழியர்கள் வரவைக்கப்பட்டு அவர்கள் பனி ஆற்றுவது சிறப்புக்குரியது பாராட்டுக்குரியது என்றாலும் கால தாமத நேரங்கள் அதிகரிக்கும் பொழுதுகளில் இன்னும் அதிகமான ஊழியர்களை ஈடுபடுத்தி பணியை துரிதப்படுத்தி இருக்கலாம் என்பது மக்கள் கருத்து.

அரசின் மெத்தனத்தால் மக்கள் கண்ணீர்
ஒரு வாரமாகியும் கடலுக்கு சென்ற கணவனை தேடி காத்திருக்கும் பெண்ணின் விம்மலையும், அலைகளோடு மகனின் முகம் தேடும் தாயின் கண்ணீரையும் , அப்பா எங்கே என்று அழுதிடும் குழந்தையின் தேடலையு , ஒட்டு மொத்த மீனவ குடும்பங்களின் உப்பு கரித்த கண்ணீர வீரியத்தை அரசு உணர்ந்து கொள்ளவில்லையே என்று அழுது கொண்டிருக்கிறது உணவின்றி பல மீனவ குடும்பங்கள். புயல் ஓய்ந்தும் இவர்களின் மன புயல் இன்னும் ஓயாத நிலையில் அரசு மெத்தனமாக இருப்பதாக கண்ணீர் விடுகின்றனர். அப்படியான சோகத்தில் வந்த கோபத்தில் தான் ரயில் போராட்டம் என்று இறங்கி விட்டார்கள்.

குமரிக் குழந்தையை காக்குமா இந்த "அம்மா"
மின்சாரம் இல்லாமல் இருளுக்குள் மூழ்கிய மக்களின் தவிப்பையும் மக்களின் குடிநீர் தாகம், சரி வர உணவில்லா திண்டாட்டம், உயிர் சேதம், பயிர் சேதம் , மீனவ குடும்பங்களின் ஓலம் இவற்றை எல்லாம் அரசு சரியாக புரிந்து கொள்ளாமல் நூற்றாண்டு விழா கொண்டாட்டம், இடைத்தேர்தல் பரப்புரை என்று அரசின் கவனம் எல்லாம் வேறு பக்கம் இருக்க தாயின் கவனிப்பை ஈர்க்க, எங்களையும் கொஞ்சம் எட்டிப் பாருங்கள் என்று சத்தத்தை அதிகரித்து அழுதிடும் குழந்தையாக தான் சாலை மறியல், ரயில் மறியல் என்று அழுது குரல் எழுப்ப தொடங்கி இருக்கிறது குமரி என்னும் குழந்தை. இனியேனும் இந்த குழந்தையை முறையாக காத்திடுமா இந்த "அம்மா"வின் அரசு?
- Inkpena சஹாயா
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications