தேவரிடம் எம்.ஜி.ஆர். சொன்ன அந்த ரகசியம்...
அண்ணே... ஒரு முக்கியமான விஷயத்தை உங்ககிட்டச் சொல்றேன்ணே. மக்கள் என்மேல அபரிமிதமான நம்பிக்கை வச்சிருக்காங்க. மக்களுக்கு... குறிப்பா "ஏழைகளுக்கு நல்லதச் செய்யணும்'னு நான் சினிமா மூலம் சொல்றதையெல்லாம் மக்கள் நம்புறாங்க.
"எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தா நல்லது செய்வாரு'னு நினைக்கிறாங்க. அப்படிப்பட்ட மக்களுக்கு, அவங்களோட எதிர்பார்ப்புகளுக்கு நான் ஏதாவது செஞ்சாகணும். அப்பதான் என்னை நம்பின மக்களை நான் ஏமாத்தியதாக இருக்காது.
"இதுக்கு என்ன செய்யலாம்?'னு யோசிச்சேன். தனியாக நான் ஒரு கட்சியைத் தொடங்கினால்தான் மக்களுடைய எண்ணங்களை பூர்த்தி செய்யமுடியும்கிற அரசியல் ஆசையை ரகசியமா என்னோட மனசில் வளர்த்துக்கிட்டு வந்தேன். இருந்தாலும்... அரசியலுக்குள்ள முழுமையா வந்தா, மக்கள் முழுமையா ஆதரிப்பாங்களா? என்பதை மேலும் உறுதி செய்துக் கிறதுக்காக ஒரு முடிவெடுத்தேன்.

அந்த முடிவு என்னன்னா... தெலுங்கில் என்.டி.ஆர். நடிச்சு பெரிய வெற்றிபெற்ற படம் ஒண்ணைப் பார்த்தேன். அது அரசியல் கதை. என்.டி.ஆர். நகராட்சி தேர்தலில் ஜெயித்து தலைவராகிற கதை. அந்தக் கதையை வாங்கி "நாமளே நடிக்கலாமே'னு முடிவெடுத்து நாகி ரெட்டியாரை சந்திச்சு, என் விருப்பத்தைச் சொன்னேன். "அந்தப் படத்தை நீங்களே எடுங்க'னு ரெட்டியார் சொன்னார்.
"நீங்க எடுத்தாத்தான் சரியாவரும்'னு நான் சொன்னேன். அதற்கு ரெட்டியார் சம்மதிச்சார்.
இரவு பகலா விடாம ஷூட்டிங் நடத்தி படத்தை எடுத்து முடிச்சிட்டேன். ரிலீஸும் பண்ணியாச்சு. "ரெட்டியாரே... நாம ரெண்டுபேரும் மட்டும் மேகலா தியேட்டருக்குப் போய் ஈவ்னிங் ஷோ பார்ப்போம்.
நாம தியேட்டருக்கு வர்ற விஷயம் மேனேஜ ருக்கு மட்டும் தெரிஞ்சாப் போதும்'னு சொன்னேன்.
திட்டமிட்டபடி படம் ஆரம்பிச்ச பிறகு நானும், ரெட்டியாரும் உள்ள போனோம். தியேட்டரின் கதவருகில் நானும், ரெட்டியாரும் நின்னுக்கிட்டு படம் பார்த்தோம்.
நகராட்சி தேர்தலில் நான் ஜெயித்துவிட்டு வரும் காட்சியில்... ‘"வாங்கய்யா வாத்யாரய்யா'' பாடலை ஜெயலலிதா பாட ஆரம்பிச்சதும்... கரகோஷம், விசில், கைதட்டல், ஆரவாரம்னு தியேட்டரே இடிந்து விழுமோ... என்கிற அளவுக்கு மக்கள் அமர்க்களப்படுத்தினாங்க. கரகோஷம் நிற்கவே இல்லை.
அந்த சந்தோஷத்தில் என் இதயத்துடிப்பே நின்றுவிடும்போல் இருந்தது. "என் மேல உயிரையே வச்சிருக்க இந்த மக்களுக்கு என் உயிரையே அர்ப்பணிக் கிறது'னு அப்ப முடிவு பண்ணினேன். ரசிகர்கள் திரும்ப வும் அந்தப் பாடலைப் போடச் சொன்னார்கள். மீண்டும் ஜனங்க குதூகலிச்சாங்க. அப்போது நான் ரெட்டியாரைக் கட்டிப்பிடித்து... "ரெட்டியாரே... நான் ஜெயிச்சிட்டேன்'னு சொல்லி கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுதே விட்டேன்.
அந்த "நம்நாடு''படம் எனக்குக் கொடுத்த ஊக்கத்தால் ‘"தமிழ்நாடு நம்நாடுதான்''என்று முடிவு செய்தேன். அன்று மக்கள் கொடுத்த உற்சாகம்தான்... இன்று திண்டுக்கல் தேர்தலில் துணிந்து இறங்கினேன். ஜெயிச்சிட்டேன்''
-இப்படி, தான் தனிக்கட்சி துவங்கியதன் காரணங்களை தேவரிடம் சொல்லியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
இவ்வாறு நக்கீரன் வாரம் இருமுறை இதழில் கலைஞானம் எழுதியுள்ளார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications