For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. சிகிச்சை.. சிங்கப்பூர் பிசியோதெரபிஸ்ட்டுகள் வந்தது ஏன்?.. மனோஜ் பாண்டியன் கேள்வி

சென்னை அப்பல்லோ மருத்துவமனையிலேயே ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபிஸ்ட் சிகிச்சை அளிக்காமல் சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்டது ஏன் என்று முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவுக்கு அந்த மருத்துவமனை பிசியோதெரபிஸ்டுகளைக் கொண்டு சிகிச்சை அளிக்காமல் சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளித்தது ஏன் என்று மனோஜ் பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி,காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில கொண்டு செல்லப்பட்டார். 75 நாள்களுக்கு பிறகு டிசம்பர் 5-ஆம் தேதி அவர் உயிர் பிரிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

Why Physiotherapist came from Singapore to treat Jayalalitha, asks Manoj Pandian

ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு மர்மங்கள் உள்ள நிலையில தற்போது மனோஜ் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், உலக தரம் வாய்ந்த அப்பல்லோ மருத்துவமனையில் அனைத்து பிரிவுகளிலும் சிறப்பு நிபுணர்கள் உள்ளனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி பயிற்சிகள் அளிப்பதற்கு அந்த மருத்துவமனையின் நிபுணர்களை ஈடுபடுத்தாமல் சிங்கப்பூரில் இருந்து பிசியோதெரபிஸ்டுகள் வரவழைக்கப்பட்டது ஏன் என்றும் இதற்கு அனுமதி அளித்தது யார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
The world famous Apollo Hospital's Physiotherapists were not treated to Jayalalitha, why those specialists from Singapore, asks Manoj Pandian.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X