நெடுவாசல் போராட்டம் தேவையற்ற ஒன்றாம் ... விடாது வம்பிழுக்கு மபி எம்.பி இல. கணேசன்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து பொதுமக்கள் நெடுவாசலில் போரட்டம் செய்வது தேவையற்றது என்று ராஜ்யசபா எம்.பியும் , பாஜக மூத்த தலைவருமான இல. கணேசன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி : ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து பொதுமக்கள் நெடுவாசலில் போரட்டம் செய்வது தேவையற்றது என்று ராஜ்யசபா எம்.பியும் , பாஜக மூத்த தலைவருமான இல. கணேசன் கூறியுள்ளார். மேலும் விவசாயிகள் ஏன் தற்கொலை செய்கிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தூத்துக்குடியில் இல கணேசன் பேசியது :
தமிழக அரசியலில் தற்போது பல்வேறு மாற்றங்களை காண முடிகிறது. குறிப்பாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பங்கேற்ற விழாவில் எதிர்கட்சியை சேர்ந்தவர்களும் பங்கேற்றது நல்ல மாற்றத்தைக் காட்டுகிறது. மேலும் சிறையில் இருந்து சசிகலாவிடம் இருந்து வரும் உத்தரவை செயல்படுத்தாமல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மக்களுக்காக செயல்படவேண்டும்.

புரியாத புதிராக உள்ளது.
விவசாயிகள் ஏன் தற்கொலை செய்கிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. விவசாயிகளுக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள பயிர் காப்பீட்டு திட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 95 சதவீதம் பேர் இணைந்துள்ளனர். இதனால் வறட்சி பாதித்த விவசாயிகள் மத்திய அரசின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.

நெடுவாசல் போராட்டம் தேவையற்றது
நெடுவாசல் போராட்டம் தேவையற்றது. தமிழகத்தில் மட்டும் எரிவாயு எடுக்கப்படுவதாக கூறப்படுவது தவறு. அருணாசல பிரதேசம், குஜராத், அஸ்ஸாம்,. ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் எரிவாயு எடுக்கப்படுகிறது. இந்த பிரச்சனையில் விவசாயிகளை சிலர் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கின்றனர்.

திமுக நாடகம் ஆடுகிறது
இதற்கான அனுமதி முந்தைய ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்டது. பிள்ளையை கிள்ளி விட்டு சிலர் தொட்டிலையும் ஆட்டுகின்றனர்.

தண்ணீர் எடுக்க அனுமதிக்ககூடாது
எதற்கெடுத்தாலும் மோடியை குறை கூறுவது தவறு. குடிக்க தண்ணீர் இல்லாத நிலையில் பெப்சி, கோக் கம்பெனிகளுக்கு தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க அனுமதிக்க கூடாது. இதை பாஜக கண்டிக்கிறது. இவ்வாறு இல. கணேசன் கூறினார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications