சேலம் மாணவி தற்கொலை ஏன்.. ஆசிரியை திட்டினாரா.. நடந்தது என்ன?
மாணவிகள் வகுப்பறையில் பேசிக்கொண்டே இருந்தால், அவர்களது பெற்றோர்களை அழைத்து வர ஆசிரியர்கள் கூறியதாகவும் மனமுடைந்த மாணவிகள் மாடியில் இருந்து குதித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

சேலம்: தனியார் பள்ளி மாணவிகளான கவிஸ்ரீ, ஜெயராணி இருவரும் வகுப்பறையில் பேசிக்கொண்டே இருந்தால், அவர்களது பெற்றோர்களை அழைத்து வர கூறியதாகவும், அதிர்ச்சியடைந்த மாணவிகள் மாடியில் இருந்து குதித்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
சேலத்தில் ஜெயராஜ் என்பவரின் மகள் ஜெயராணி மற்றும் சக்திவேலின் மகள் கவிஸ்ரீ. இவர்கள் இருவரும் சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று காலை பள்ளிக்கு சென்ற மாணவிகள் இருவரும் மாலை வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பள்ளப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து மாணவிகள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

மாடியில் இருந்து குதித்தனர்
இந்நிலையில், இன்று காலை சேலம் 2வது அக்ரஹாரா தெருவில் உள்ள உணவகத்தின் 4வது மாடியிலிருந்து கவிஸ்ரீ, ஜெயராணி ஆகிய இரண்டு மாணவிகளும் கீழே குதித்தனர். அதில், ஜெயராணி என்ற மாணவி சம்பவ இடத்திலேயே தலை உடைந்து உயிரிழந்தார்.

உயிருக்கு போராடும் மாணவி
கவிஸ்ரீ உயிருக்குப் போராடிய நிலையில், அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கவிஸ்ரீக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நெருங்கிய தோழிகள்
நெருங்கிய தோழிகளான கவிஸ்ரீ மற்றும் ஜெயராணி ஆகியோர் வகுப்பில் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்ததால், இருவரையும் ஆசிரியர் பிரித்து உட்கார வைத்துள்ளார். அதனால் மாணவிகள் மனமுடைந்து தற்கொலை செய்துள்ள கொண்டதாக கூறப்படுகிறது.

தோழிகள் அதிர்ச்சி
மாணவிகள் மரணம் பள்ளி மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கருத்து கூறியுள்ள ஆசிரியர்கள்,கவிஸ்ரீ, ஜெயராணி இருவரும் வகுப்பறையில் பேசிக்கொண்டே இருந்தால், இருவரையும் அழைத்து அவர்களது பெற்றோர்களை அழைத்து வர கூறினோம் என்றும் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளனர்.

தீவிர விசாரணை
தற்கொலை செய்ததற்கான உண்மை காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் விசாரணைக்குப் பின்னரே மாணவிகளின் தற்கொலை முடிவுக்குக் காரணம் என்ன என்பது குறித்த உண்மைத்தகவல் தெரியவரும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications