பேச வந்ததே கடைசி நிமிடத்தில்தான்.. இதில் "டைம் இல்லை" என்று புலம்பிய விஜயகாந்த்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி- தமாகா இணைந்து நடத்திய தேர்தல் சிறப்பு மாநாட்டில் விஜயகாந்த்தை பக்காவாக கையாண்டார்கள் ம.ந.கூ. மற்றும் தேமுதிக தலைவர்கள்.

வழக்கம் போல லேட்டாகத்தான் மேடைக்கு வந்தார் விஜயகாந்த். வந்தபோது மேடையில் இருந்த அத்தனை பேரும் எழுந்து நின்று வரவேற்றனர். அப்போது பேசிக் கொண்டிருந்த ஜி.ராமகிருஷ்ணன் தனது பேச்சை நிறுத்த வேண்டியதாயிற்று.

மேடைக்கு வந்த விஜயகாந்த்தை கடைசி நேரத்தில்தான் பேச விட்டார்கள். அதாவது அவருக்கு எவ்வளவு குறைவான நேரம் தர முடியுமோ அவ்வளவுக்கு குறைவான நேரம் கொடுத்தார்கள். அதற்கேற்றார் போல வைகோவின் பேச்சு ஜவ்வு மிட்டாயாக நீண்டது.

குறைவான பேச்சு

குறைவான பேச்சு

விஜயகாந்த் பேசுவது புரிவதில்லை என்பதாலும், அவரை அதிகமாக பேச விட்டால் பிரச்சினையாகி விடுகிறது என்பதாலும் அவரை மிக மிக சுருக்கமாக பேச வைக்கிறார்கள் ம.ந.கூ. தலைவர்கள்.

லேட்டாதான் வருவார்.. லேட்டாதான் பேசுவார்

லேட்டாதான் வருவார்.. லேட்டாதான் பேசுவார்

மேடைக்கு எப்போதுமே முன் கூட்டியே வந்து அமருவதில்லை விஜயகாந்த். மாறாக கடைசி நேரத்தில்தான் வருகிறார் அல்லது மாநாடு ஆரம்பித்து ரொம்ப நேரம் கழித்துத்தான் வருகிறார்.

சுருக்கமாக பேசுவார்

சுருக்கமாக பேசுவார்

மேலும் அவர் பேசும் நேரமும் குறைந்து விட்டது. சுருக்கமான நேரத்தைக் கொடுத்து பேச வைக்கிறார்கள். அவர் என்ன பேசினார் என்பதை கேட்பவர்கள் புரிந்து கொள்வதற்குள் அவர் பேசி முடித்து விடுகிறார்.

டைம் இல்லைன்னு புலம்பினால் எப்படி?

டைம் இல்லைன்னு புலம்பினால் எப்படி?

இப்படி கடைசி நேரத்தில் மேடையில் பேச வரும் விஜயகாந்த், எனக்கு நிறைய பேசனும் போல இருக்கு. ஆனால் நேரம் பத்தாது என்பதையே பலமுறை சொல்லி அதிலேயே டைமையும் வேஸ்ட் பண்ணி விடுகிறார்.

நேற்று கூட அப்படித்தான்

நேற்று கூட அப்படித்தான்

நேற்றும் மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்த தேர்தல் சிறப்பு மாநாட்டிலும் இதே கூத்துதான். மேடைக்கு வழக்கம் போல லேட்டாக வந்தார்.

"டொம் டொம் டோரா" மிஸ்ஸிங்!

வழக்கமாக அவர் மேடைக்கு வந்தால் டொம் டொம் டோரா பாட்டைப் போட்டு விட்டு தொண்டர்களை உசுப்பேத்துவர். ஆனால் பாட்டைக் காணோம். விஜயகாந்த் மட்டும்தான் வந்தார். கூடவே பெரும் கூட்டமாக பலரும் அவருக்கு பக்க பலமாக வந்தனர்.

உட்கார்ந்தார்..

உட்கார்ந்தார்.. "உம்"மென்று கவனித்தார்!

வந்தவர் சீட்டில் அமர்ந்து தலைவர்கள் பேச்சைக் கவனிக்க ஆரம்பித்தார். வைகோ பேசிய பிறகுதான் அவருக்கு பேச டைம் கொடுத்தார்கள். வைகோ ரொம்ப நேரம் பேசினார். உள்ளூரில் ஆரம்பித்து ரஷ்யப் புரட்சி, அமெரிக்கப் புரட்சி, கியூபப் புரட்சி, தனது தாயார் குறித்த நினைவலைகள் என தொடர்ந்த அவர் கடைசியாக தனது பேச்சை முடித்தார் வைகோ.

10 நிமிடத்தில் முடிந்த பேச்சு

10 நிமிடத்தில் முடிந்த பேச்சு

விஜயகாந்த் பேச வந்தபோது கிட்டத்தட்ட 9.30 ஆகியிருந்தது. அவரும் பேச வந்ததும் இப்ப மணி என்ன ஆச்சு என்று கேட்டார். ஓ 9.35 ஆயிருச்சா... எனக்கு நிறைய பேசனும். ஆனா 10 மணிக்குள்ள முடிக்கச் சொல்றாங்க. இல்லாட்டி கேஸ் போடுவாங்க என்று பேசிப் பேசியே பாதி நேரத்தை போக்கினார்.

சாலிடாக அரை மணி நேரம் பேசியிருக்கலாம்

சாலிடாக அரை மணி நேரம் பேசியிருக்கலாம்

உண்மையில் விஜயகாந்த் பேச வந்தபோது அவருக்கு சாலிடாக அரை மணி நேரம் இருந்தது. நிறுத்தி நிதானமாக பேசியிருந்தால் கூட ஏகப்பட்ட மேட்டர்களை அவர் தொட்டிருக்கலாம். ஆனால் எனக்கு நேரம் இல்லை என்று சொல்லிச் சொல்லியே பத்து நிமிடத்தில் பேசி முடித்து விட்டார்.

பொசுக்குன்னு போச்சே!

பொசுக்குன்னு போச்சே!

"கேப்டன்" நிறைய பேசுவார், வி.சி.சந்திரகுமாரை ஒரு பிடி பிடிப்பார் என்றெல்லாம் எதிர்பார்த்திருந்த காத்திருந்த தொண்டர் படை, கேப்டன் வழக்கம் போல தட்டுத் தடுமாறி 10 நிமிடத்தில் பேசி முடித்ததைப் பார்த்து அட போங்கப்பா என்று அலுத்துக் கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+