சேலம்- கள்ளக்காதல்.. கணவனை கொன்று உடலை வெட்டி பிரிட்ஜில் வைத்த மனைவி கைது!

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த மனைவி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் ஜாகீர்அம்மாபாளையம் சாஸ்திரிநகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (41). சலூன் கடைகள் நடத்தி வந்தார். இவரது மனைவி சுந்தரி (33), மகன்கள், பரத் (16), பவித்ரன் (15), ஹரிபிரசாத் (6).

இந்நிலையில், 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பாலகிருஷ்ணனை காணவில்லை. இதுகுறித்து அவரது தந்தை பாண்டுரங்கன், இவ்வாண்டு பிப்ரவரியில், சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். போலீசாரும் பாலகிருஷ்ணனை தேடி வந்தனர்.

திடீர் திருப்பம்

திடீர் திருப்பம்

ஆனால், வழக்கில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டது. பாலகிருஷ்ணனை மனைவி சுந்தரியும் அவரது கள்ளக்காதலன் லோகநாதன் (28) மற்றும் அவரது நண்பர்கள் தாவித்குமார், தேவன் ஆகியோர் இணைந்து கொலை செய்தது தெரியவந்தது.

கணவனுடன் உறவு இல்லை

கணவனுடன் உறவு இல்லை

இதையடுத்து போலீசார் சுந்தரியை கைது செய்தனர். அவர் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம்: நாங்கள் சாஸ்திரி நகரில் வாடகைக்கு குடியிருந்தபோது, வீட்டின் உரிமையாளர் மகன் லோகநாதனுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. என் கணவருக்கு உப்பு நோய் ஏற்பட்டதால், உடல் உறவில் நாட்டமில்லை. எனவே, நானும் அவரும் அதிக நாட்கள் உறவு கொள்ளாமல் இருந்தோம். இதனால், லோகநாதனுடன் கள்ளக்காதல் வைத்துக் கொண்டேன்.

முன்வாசல், பின்வாசல்

முன்வாசல், பின்வாசல்

நாங்கள் இருந்த மாடி வீட்டில் 2 வாசல்கள் இருக்கும். லோகநாதனுடன் பகலில் நான் உல்லாசமாக இருப்பேன். அப்போது, கணவர் வந்து விட்டால், பின்வாசல் வழியாக லோகநாதன் சென்றுவிடுவார்.

அப்படியும், ஒருநாள் மெய்மறந்து நாங்கள் உல்லாசம் அனுபவித்தபோது, கணவர் பார்த்துவிட்டார். இதையடுத்து என்னை இம்சை செய்ய ஆரம்பித்தார்.

பிரிட்ஜில் சடலம்

பிரிட்ஜில் சடலம்

இதுகுறித்து நான் லோகநாத்திடம் கூறினேன். பின்னர் இருவரும் சேர்ந்து கொலை செய்ய முடிவு செய்தோம். கடந்த ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி இரவு என் கணவர் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது லோகநாதன், கணவனின் பின் மண்டையில் அடித்து கொலை செய்தார். பின்னர் உடலை இரண்டாக வெட்டி, சாக்கு பையில் அடைத்து லோகநாத் வீட்டு பிரிட்ஜில் வைத்து விட்டார். அடுத்த நாள் வீட்டின் வளாகத்தில் செப்டிக் டேங்க் கட்டுவதாக கூறி 6 அடி பள்ளம் தோண்டி நண்பர்களுடன் சேர்ந்து என் கணவர் சடலத்தை அதில் புதைத்தார்.

போலீசில் புகார்

போலீசில் புகார்

இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என கூறிவிட்டார். கணவரின் குடும்பத்தினர் கேட்டபோது உடல் நலம் சரியில்லாததால், கோயிலுக்கு சென்றுள்ளார் எனக்கூறி வந்தேன். இந்நிலையில் கடந்த 4 மாதம் முன் என் மாமியார் இறந்தார். நான் என் மகன்களுடன் காரியத்திற்கு சென்றேன். அங்கு என் கணவர் குறித்து கேட்டு தகராறு செய்ததால் எனது மாமனாருடன் சென்று சூரமங்கலம் போலீசில், எனது கணவர் காணாமல் போனதாக புகார் செய்தேன். புகார் கொடுத்தது குறித்து லோகநாத்திடம் கூறினேன். இதையடுத்து, லோகநாத் என் கணவரின் சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்து, காட்டு பகுதியில் வீசிவிட்டார். இவ்வாறு சுந்தரி போலீசில் வாக்குமூலம் தெரிவித்தார்.

உல்லாச பறவை

உல்லாச பறவை

இக்கொலைக்கு லோகநாத்தின் நண்பர்கள் தாவித்குமார் மற்றும் தேவன் ஆகியோர் உதவி செய்துள்ளனர். எனவே இம்மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். லோகநாத், பி.காம் படிப்பை பாதியில் விட்டுவிட்டு, தனது தந்தைக்குள்ள 5 வீட்டு வாடகையில் இருந்து கிடைக்கும் பணத்தில் உல்லாசமாக பெண்களுடன் ஊர் சுற்றி வந்துள்ளார். லோகநாதனின் தந்தை ராஜேந்திரன் பாலக்காடு ரயில்வே கோட்ட பகுதி அதிகாரி என்து குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+