புருஷனுக்குக் கண்ணு சரியா தெரியலை.. கள்ளக்காதல் "கண்ணை மறைக்க" அடித்துக் கொன்ற மனைவி!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை அருகே சரியாக கண் பார்வை இல்லாத கணவரை வெறுத்து வந்த மனைவி கொடூரமாக அவரை அடித்துக் கொன்ற செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கணவரை கொலை செய்வதற்கு கள்ளக்காதலும் ஒரு காரணமாம். போலீஸார் அந்தப் பெண்ணையும், அவரது கள்ளக்காதலனையும் கைது செய்துள்ளனர்.

இருகூர் ஜெயஸ்ரீ நகரைச் சேர்ந்தவர் 35 வயதான சக்திவேல். இவரது மனைவி பெயர் சாரதா. 30 வயதாகும் சாரதாவுக்கு கணவருடன் ஆரம்பத்திலிருந்தே ஒத்துப் போகவில்லை. இருப்பினும் இந்தத் தம்பதிக்கு 6 வயது மகளும், 5 வயதில் மகனும் உள்ளனர்.

Wife arrested for murdering her husband

சக்திவேலுக்கு கண் பார்வை சற்று குறைவு, மேலும் சாரதாவை விட குறைவாகவே படித்துள்ளார். இதனால் கணவரை எப்போதுமே மட்டமாகவே நினைப்பாராம். இ்த நிலையில் வீட்டிலேயே செல்லப் பிராணிகளை வளர்த்து விற்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார் சாரதா. அதில் ராம் என்பவரும் இணைந்து செயல்பட்டார். அதில் இருவருக்கும் தொடர்பாக கள்ளக்காதலில் திளைத்து வந்தனர்.

இந்த நிலையில் ராமுடன் நிரந்தரமாக செட்டிலாக நினைத்த சாரதா, சக்திவேலை கொலை செய்ய முடிவெடுத்தார். அதற்கு ராமும் தூபம் போட்டார். சம்பவத்தன்று நள்ளிரவு தனது வீட்டுக்கு ராமை வரவழைத்தார் சாரதா. ராமுடன் அவரது நிறுவனத்தில் வேலை பார்க்கும் கிருஷ்ணா என்பவரும் உடன் வந்தார்.

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சக்திவேலை இந்த மூவரும் சேர்ந்து கட்டையால் சரமாரியாக அடித்தும், கத்தியால் குத்தியும் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை துணியில் சுற்றி வீட்டுக்குப் பின்னால் இருந்த தொட்டியில வீசி விட்டனர். அடுத்த நாள் காலை தனது கணவரைக் காணவில்லை என்று கூறி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் சாரதா. ஆனால் போலீஸார் விசாரணையில் இறங்கியபோது உண்மை வெளியானது. இதையடுத்து சாரதாவைப் போலீஸார் கைது செய்தனர்.

ராம், கிருஷ்ணா தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+