கணவர் கழுத்தை நெரித்துக் கொலை.. நெஞ்சு வலியால் மரணம் என நாடகம்... கள்ளக்காதலனுடன் மனைவி கைது!
சென்னை: கள்ளக்காதல் மோகத்தில் கணவரின் கழுத்தை இறுக்கிக் கொன்று விட்டு, நெஞ்சு வலியால் செத்துப் போய்ட்டாரே என்று நாடகமாடிய மனைவி போலீஸார் அவரது கள்ளக்காதலனோடு சேர்த்துக் கைது செய்துள்ளனர்.
கள்ளக்காதல் மோகத்தில் கொலைகள் நடப்பது தமிழகத்தின் கலாச்சாரம் போல மாறி விட்டது. எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு அப்பாவி இப்படி தினந்தோறும் செத்துக் கொண்டுதான் உள்ளார். அந்த வகையில் சென்னை நன்மங்கலம் பகுதியில் ஒரு கணவரை, தனது கள்ளக்காதலனோடு சேர்ந்து கழுத்தை நெறித்துக் கொலை செய்து கைதாகியுள்ளார் ஒரு மனைவி.
அந்தப் பாசக்கார மனைவியின் பெயர் அம்சரேகா. இவரது கணவர் சத்தியநாராயணன். இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஜி.பி.சாமி நகரில் வசித்து வந்தனர்.
செப்டம்பர் 22ம் தேதி சத்தியநாராயணன் இறந்து விட்டார். தனது கணவர் திடீரென நெஞ்சு வலி வந்து இறந்து போய் விட்டதாக அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார் அம்சரேகா. குடும்பத்தினரிடமும் அதுபோலவே கூறியுள்ளார். ஆனால் தனது தம்பியின் இறுதிச் சடங்குக்காக வந்திருந்த சத்தியநாராயணனின் சகோதரி அஞ்சலை, தம்பியின் கழுத்தில் கழுத்தை நெரித்த தடம் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். அதில் கழுத்து நெரிபட்டதால்தான் சத்தியநாராயணன் இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து அம்சரேகாவைப் பிடித்து தீவிரமாக விசாரித்தனர். அதில், தானும், தனது கள்ளக்காதலன் ஆறுமுகமும் சேர்ந்துதான் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார் அம்சரேகா.
இந்த ஆறுமுகம் கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். நைலான் கயிறால் இருவரும் சேர்ந்து சத்தியநாராயணனின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளனர். தங்களது காம விளையாட்டுக்கு கணவர் இடையூறாக இருந்ததால் அவரைக் கொல்லும் முடிவை அம்சரேகா எடுத்துள்ளார். அதற்கு ஆறுமுகம் உதவியுள்ளார். இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இப்போது சத்தியநாராயணின் இரு குழந்தைகளும் அனாதைகளாகியுள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications