காமம் தலைக்கேறி.. ஆட்டம் போட்ட பிரியா.. வெறும் 5 லிட்டர் பெட்ரோலில் குடும்பத்தையே எரித்த கொடுமை!

கணவனை உயிரோடு எரித்து கொன்றுள்ளார் மனைவி

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: "இந்த கள்ளக்காதல் எல்லாம் வேண்டாம், விட்டுடு" என்றுதான் கணவர் சொன்னார்.. அதுக்கே அவரையும், 2 குழந்தைகளையும் பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டார் ப்ரியா!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்துள்ள பகுதி சோமநாயக்கன்பட்டி.. இங்கு வசித்து வந்தவர் சசிகுமார்.. இவரது மனைவிதான் பிரியா.. கல்யாணம் ஆகி 12 வருஷமாகிறது. 9 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள்.

இந்நிலையில், திடீரென ஒருநாள் தம்பதிக்குள் சண்டை வந்துவிட்டதால், தன் குழந்தைகளுடன் சேர்ந்து சசிக்குமார் தீக்குளித்துவிட்டதாக போலீசுக்கு தகவல் வந்தது.. இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 குழந்தைகள், சசிகுமாரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

 உயிரிழப்பு

உயிரிழப்பு

ஆனால், சிகிச்சை பலனின்றி சசிகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.. முன்னதாக, அதாவது தன் சசிகுமார் இறப்பதற்கு முன்பேயே நீதிபதியிடம் மரண வாக்குமூலம் அளித்துவிட்டார்.. அதில், பிரியாதான் தன் மீதும், தன் குழந்தைகள் மீதும் பெட்ரோலை ஊற்றி எரித்ததாக சொல்லிவிட்டு இறந்துவிட்டார். கணவன் இப்படி ஒரு வாக்குமூலம் தந்தது பிரியாவுக்கு தெரியாது.. தன் கணவர் தீக்குளித்துவிட்டதாக, பிரியா போலீசில் புகார் அளித்திருந்தார்.. அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.

 பிரியா

பிரியா

ஆனால் பிரியாவிடம்தான் விசாரணை நடந்தது.. மரண வாக்குமூலம் பற்றி தெரிந்ததும் பிரியா அதிர்ச்சி அடைந்தார்.. இறுதியில் எல்லா உண்மையையும் கக்க ஆரம்பித்தார். 3 வருடங்களுக்கு முன்பு குடும்ப வறுமைக்காக சசிகுமார் துபாயில் வேலைக்கு சென்றுள்ளார்.. அங்கு வேலையில் சேர்ந்த முதல் மாசமே மனைவி, குழந்தைகளிடம் பேச ஒரு ஸ்மார்ட் போன் வாங்கி அனுப்பி வைத்துள்ளார்.. இந்த ஸ்மார்ட் போன்தான் பிரியாவை திசை திருப்பியது.. FACEBOOK, TIKTOK, என்று ஒன்றையும் பிரியா விடவில்லை.. ஆட்டம் அதிகமானது.. ஆண் நண்பர்களும் அதிகமானார்கள்.. பலருடன் ஊர் சுற்ற ஆரம்பித்தார்.

 ஆண் நண்பர்கள்

ஆண் நண்பர்கள்

கணவன் பாடுபட்டு உழைத்து அனுப்பி வைக்கும் பணத்தை ஆண் நண்பர்களுடன் ஜாலியாக இருந்தே செலவழித்தார்.. ஒருகட்டத்தில் ஓரளவு விவரம் தெரிந்த 9 வயது மகன், இதையெல்லாம் பார்த்து அதிர்ந்து போனான்.. தன் அப்பாவிடம் தனக்கு தெரிந்தவரை அம்மாவின் நடவடிக்கை பற்றி சொல்லி உள்ளான். கடந்த 4 மாசத்துக்கு முன்பு கொரோனா சமயத்தில் ஊருக்கு வந்திருக்கிறார் சசிகுமார்.. பிரியாவையும் கண்காணிக்க ஆரம்பித்தார்.

 குழந்தைகள்

குழந்தைகள்

இதனால் தன்னிஷ்டப்படி ஊர் சுற்ற முடியாமல் பிரியா தவித்துள்ளார்.. அதனால் கணவனையும், தன்னுடைய 2 குழந்தைகளையும் கொலை செய்ய முடிவு செய்தார்.. இதற்காக ஒரு மாசத்துக்கு முன்னாடியே 5 லிட்டர் பெட்ரோலை வாங்கி வீட்டில் ரெடியாக வைத்துவிட்டாராம் பிரியா... இந்த சமயத்தில்தான், ஊரடங்கில் தளர்வு ஏற்படவும், பிரியா வழக்கம்போல ஆண் நண்பர்களுடன் ஊரை சுற்றி வந்தார்.. இதை கண்ணால் பார்த்துவிட்ட சசிகுமார் பிரியாவை கண்டித்தார்.

 வாக்குமூலம்

வாக்குமூலம்

இதுதான் பிரியாவுக்கு எரிச்சலை தந்தது. சம்பவத்தன்று, சசிகுமார், குழந்தைகள் தூங்கும்போது, ஒரு கேன் நிறைய இருந்த பெட்ரோலை எடுத்து ஊற்றி தீயையும் வைத்து கொளுத்திதவிட்டார். 3 பேருமே தீயில் எரிந்து துடிக்கும்போது, அவர்களை காப்பாற்றுவதுபோல பாவ்லா காட்டி உள்ளார்.. இவ்வளவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இப்போது பிரியா கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+