துன்புறுத்துகிறார்.. துணை கமிஷனர் மீது மனைவி பரபர புகார்.. பொய் என உறவினர்கள் புகார்
சென்னை: சென்னை காவல்துறை துணை ஆணையர் சந்தோஷ் குமார் தன்னை அடித்துத் துன்புறுத்தி வரதட்சணைக் கேட்டு சித்திரவதை செய்கிறார். எனது மகனைக் கடத்தப் பார்த்தார் என்று அவரது மனைவி மேகனா கூறிய புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பல்வேறு மாவட்ட எஸ்பியாக இருந்தவர் சந்தோஷ்குமார். தற்போது சென்னையில் துணை ஆணையராக இருந்து வருகிறார். அவரது மனைவி மேகனா. இவர் நேற்று திடீரென டிஜிபி அலுவலகத்திற்கு வந்த கணவர் மீது புகார் கொடுத்தார். அதன் பின்னர் விசாரணைக்காக கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்றார்.

கூடுதல் டிஜிபி ராஜேந்திரனைச் சந்தித்துப் புகார் கொடுத்து விட்டு வந்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் எனது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துகிறார். என்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அவர் துன்புறுத்துகிறார். அவரது துன்புறுத்தல்களை தாங்க முடியாமல் நான் அவரை விட்டு பிரிந்துவிட்டேன்.
அவர் மீது வழக்குப்பதிவு (எப்.ஐ.ஆர்) செய்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். ஆடம்பர வாழ்க்கைக்கு சொகுசு வீடு மற்றும் நிலம் வரதட்சணையாக கேட்கிறார். அவருடன் வாழ்ந்த வாழ்க்கை மூலம் 9 வயதில் மகன் இருக்கிறான். அவன் என்னுடன்தான் வாழ்கிறான். சென்னையில் அதிகாரமிக்க பதவியில் இருக்கும் எனது கணவர், எனது மகனை கடத்திச்சென்றுவிடுவாரோ என்ற அச்சம் உள்ளது. நான் எனது கணவர் மீது புகார் கொடுத்துள்ளதால், எனக்கு செல்போனில் மிரட்டல்கள் வருகிறது. உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்

அதன் பின்னர் கமிஷனர் அலுவலகம் சென்ற அவரிடம் கூடுதல் கமிஷனர் திருஞானம் விசாரணை நடத்தினார். சந்தோஷ் குமாரின் அலுவலகத்திற்கு அடுத்த அறைதான் திருஞானத்தின் அலுவலகம் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணையின்போது சந்தோஷ்குமாரும் தனது அறையில் பணியில் இருந்தார்.

சந்தோஷ் குமார் நல்லவர்
இதற்கிடையே சந்தோஷ் குமார் நல்லவர், அவர் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறார் மேகனா. அப்பழுக்கற்ற நேர்மையான அதிகாரியான சந்தோஷ்குமாருக்கு வேண்டாத போலீஸ் அதிகாரிகளே மேகனாவைத் தூண்டி விட்டுள்ளதாக போலீஸ் வட்டாரத்திலேயே கூறுகின்றனர். ஆடம்பரமாக வாழ ஆசைப்படும் மேகனா, லஞ்சம் வாங்காமல் மாதச் சம்பளத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தும் சந்தோஷ் குமாரை விரும்பவில்லை என்றும் அதனால்தான் இப்படி அவதூறான புகார்களைச் சுமத்துவதாகவும் நண்பர்கள், சந்தோஷ்குமாரின் உறவினர்களும் கூறியுள்ளனர்.
கண்ணீர்
மேகனாவின் புகார் குறித்து செய்தியாளர்கள் சந்தோஷ் குமாரை அணுகி கேட்டபோது அவர் பதில் சொல்லவில்லை. மாறாக கண்ணீர் வடித்தார். எதுவும் பேசவில்லை.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications