அதுக்குள்ள என்ன அவசரம் விக்கி?

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகாத நிலையில் பிரபல விக்கிபீடியா இணையதளத்தில் தினகரன் வெற்றியடைந்து விட்டதாக பதிவாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தினகரனுக்கு 'விசிலடித்த' மக்கள்- வீடியோ

    சென்னை: ஆர்.கே.நகர் தேர்தலில் அனைத்து வேட்பாளர்களை விட பல ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் தினகரன் உள்ளார். தினகரனின் வெற்றிமுகம் பிரகாசமாக உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அவரின் ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் உள்ளனர்.

    தினகரனின் வெற்றி முழக்கம் விரைவில் தமிழகம் முழுவதும் ஒலிக்கவுள்ள நிலையில், தினகரனின் ஆதரவாளர்கள் அதற்கு தயாராகி வருகின்றனர். ஒரு பக்கம் கட்சி சின்னமான குக்கருடன் குத்தாட்டம், மறுபக்கம் பட்டாசுகளுடன் பட்டைய கிளப்பியபடி தினகரன் ஆதரவாளர்கள் ஆனந்த கூத்தாடி வருகின்றனர்.

    Wikipedia declares the dinakaran's victory before the EC does

    இந்த நிலையில் பிரபல தகவல் மையமாக கருதப்படும் விக்கிபீடியா இணையதளம் ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் தினகரன் வெற்றி பெற்று விட்டதாக அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகளும், தேர்தல் ஆணையமும் இந்த தகவலை வெளியிடுவதற்கு முன்பாகவே இத்தளம் வெற்றியை பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தினகரனின் வெற்றி உறுதியான ஒன்றாக இருந்தாலும் கூட, தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவிப்பதற்கு முன் இவ்வாறு அறிவிப்பு வெளியிடுவது சட்டப்படி தவறாக கருதப்படுகிறது. விக்கிபீடியாவில் யார் வேண்டுமானாலும் தகவல்களை வெளியிடலாம் என்பதால் இதற்கு குறிப்பிட்டு யாரையும் பொறுப்பாக்க முடியாது என்பது தான் உண்மை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+