காங்கிரஸுக்கு என்னென்ன தொகுதிகள் கிடைக்கும்?.. ஒரு பிளாஷ்பேக்!
சென்னை: திமுக கூட்டணியில் இணைந்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு என்னென்ன தொகுதிகள் கிடைக்கும் என்பது எதிர்பார்ப்புக்குரியதாகியுள்ளது.
முன்பு ஜி.கே.வாசன் அணி காங்கிரஸ் கட்சியில் இருந்தது. காங்கிரஸ் கட்சியிலேயே மிகப் பெரிய கோஷ்டியாக அதுதான் இருந்தது. அது போன பிறகு கட்சியில் ஒரு விறுவிறுப்பே இல்லை என்பதே உண்மை.
இந்த நிலையில் கடந்த 2011 தேர்தலைப் போலவே இந்த முறையும் திமுகவுடன் இணைந்துள்ளது காங்கிரஸ். அக்கட்சிக்கு எத்தனை சீட் கிடைக்கும் என்று தெரியவில்லை.
இருப்பினும் கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த தொகுதிகளில் பல இந்த முறை கிடைக்க வாய்ப்புள்ளது. காரணம், அவையெல்லாம் அதிமுக வலுவாக இருந்த தொகுதிகள் என்பதால்!

வடக்கு மண்டலத்தில் அதிக தொகுதிகள்
காங்கிரஸ் கட்சிக்கு வட பகுதிகளில்தான் அதிக தொகுதிகள் கிடைத்தன. கிழக்கு மண்டலத்தில் வெறும் 5 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது. வடக்கு மண்டலத்தில் 20 தொகுதிகள் கிடைத்தன. இங்குதான் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் கிடைத்தது.

தெற்கில் 19.. மேற்கில் 11
தென் மண்டலத்தில் 19, மேற்கு மண்டலத்தில் 11, கிழக்கு மண்டலத்தில் 5 தொகுதிகள் கிடைத்தது. அனைத்து மாவட்டங்களிலும் தொகுதிகள் தேவை என்று காங்கிஸ் கூறி வந்தபோதிலும், மூன்று மாவட்டங்களில் அக்கட்சிக்கு ஒரு சீட் கூட கொடுக்கப்படவில்லை.

தேனி, தர்மபுரி, பெரம்பலூர் இல்லை
தேனி, தர்மபுரி, பெரம்பலூர் மாவட்டங்களில் காங்கிரஸுக்கு ஒரு தொகுதியையும் திமுக ஒதுக்கவில்லை. அதேபோல மதுரை மேற்கு, நாமக்கல் ஆகிய தொகுதிகளும் காங்கிரஸுக்குக் கிடைக்கவில்லை.

மேற்கைப் பறித்து வடக்கு, தெற்கைக் கொடுத்த திமுக
மதுரை மேற்கைப் பறித்த திமுக அதற்குப் பதில் மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு ஆகிய இரு தொகுதிகளை காங்கிரஸுக்குக் கொடுத்தது. அதாவது மதுரை மாநகரில் உள்ள 5 தொகுதிகளில் 2 காங்கிரஸுக்குப் போனது. மீதமுள்ள மதுரை மத்தி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு ஆகிய தொகுதிகளில் திமுக போட்டியிட்டது.

கொங்கு மண்டலத்தில் பம்மிய திமுக
அதிமுகவின் கோட்டையாக கொங்கு மண்டலம் திகழ்ந்ததால் அங்கு திமுக அதிகம் போட்டியிடவில்லை. மாறாக அந்தப் பகுதியில் 10 தொகுதிகள் உள்பட மேற்கு மண்டலத்தில் மொத்தமாக 11 தொகுதிகளையும் காங்கிரஸுக்கே கொடுத்து விட்டது. கடந்த தேர்தலில் கொங்கு மண்டலத்தை திமுக கிட்டத்தட்ட கை கழுவி விட்டது.

சென்னையிலும் காங்கிரஸே
அதேபோல சென்னையிலும் கூட அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகளான ராயபுரம், மயிலாப்பூர், தியாகராய நகர் ஆகிய தொகுதிகளை இந்த முறை காங்கிரஸுக்கே கொடுத்து விட்டது. தான் வென்ற அண்ணா நகர், புதிதாக உருவாகியுள்ள திரு.வி.க நகரையும் காங்கிரஸுக்கே கொடுத்தது.

நெல்லை மாவட்டத்தில் 4 தொகுதிகள்
நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளை, நான்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் கடையநல்லூர், வாசுதேவநல்லூர், நான்குநேரி, ராதாபுரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் காங் போட்டியிட்டது.

ராதாபுரம்
2006 சட்டசபை தேர்தலில் மாவட்டத்தில் 11 சட்டசபை தொகுதிகள் இருந்தன. இதில் கடையநல்லூர், நான்குநேரி,சேரன்காதேவி ஆகிய தொகுதிகளைதான் காங் கைப்பற்றியது. தொகுதி சீரமைப்பை தொடர்ந்து சேரன்மகாதேவி நீக்கப்பட்டது. இதற்கு பதிலாக ராதாபுரம் தொகுதி ஓதுக்கப்பட்டது. இதனால் ராதாபுரம் தொகுதியை திமுக வசமிருந்து காங் கைப்பற்றியது.
இந்த எந்தெந்த தொகுதிகள் காங்கிரஸுக்குக் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications