தலித் வாக்குகள் அதிமுகவுக்கு தொடர்ந்து கிடைக்குமா என்பது சந்தேகமே.. திருமாவளவன்
அதிமுகவின் தலைமை பொறுப்பை கைப்பற்ற தேவர், கவுண்டர் சமூகத்தினர் முயற்சிக்கின்றனர். இனியும் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு கிடைத்து வந்த தலித் வாக்குகள் அதிமுகவுக்கு தொடருமா என்பது சந்தேகம் என்கிறார் திருமாவள
சென்னை: எம்ஜிஆர், ஜெ.வுக்கு கிடைத்த தலித் வாக்குகள் அதிமுகவுக்கு தொடர்ந்து கிடைக்குமா என்பது சந்தேகமே என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். தற்போது அதிமுகவின் பொதுச்செயலராக சசிகலா முன்னிறுத்தப்பட்டு வருகிறார்.

ஜாதிய சலசலப்பு
இருவருமே தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவுக்கு 28 எம்.எல்.ஏ.க்களை அள்ளிக் கொடுத்த கவுண்டர் சமூகத்துக்கு அதிமுக தலைமைப் பொறுப்பில் முக்கியத்துவம் தரப்பட வேண்டும் எனவும் குரல்கள் ஒலித்து வருகின்றன.

20% தலித் வாக்குகள்
இப்படி பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் கை அதிமுகவில் ஓங்கும் நிலையில் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவுக்கு 20% வாக்குகளை அள்ளிக் கொடுத்து வந்த தலித் வாக்கு வங்கி இனி தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக தி இந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளதாவது:

ஜெ. மீது நம்பிக்கை
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவருமே ஜாதிகளைக் கடந்த தலைவர்களாகவே இருந்தனர். ஜெயலலிதா தலித் தலைவராக இல்லாத போதும் கூட தலித் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தனர்.

சந்தேகம்தான்...
எம்.ஜி.ஆருக்கு இருந்த தலித் வாக்கு வங்கி ஜெயலலிதாவுக்கும் தொடர்ந்தது. ஆனால் ஓ பன்னீர்செல்வமோ அல்லது வேறு ஒருவரோ அதிமுகவுக்கு தலைமை ஏற்கும் நிலையில் அந்த தலித் வாக்குகள் தொடர்ந்து கிடைக்குமா என்பது சந்தேகமே.
இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

3 அமைச்சர்கள்
அதிமுகவில் தேவர் சமூகத்தைச் சேர்ந்த 20 பேர் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் 9 பேர் அமைச்சர்களாக இருக்கின்றனர்.
28 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட கவுண்டர் சமூகத்துக்கு 3 அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ள்ளது. ஆனால் 31 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட தலித் சமூகத்தில் வெறும் 3 பேர் மட்டுமே அமைச்சர்களாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்











Click it and Unblock the Notifications