பருப்பை இங்கே உற்பத்தி செய்வோம், பெட்ரோலை இறக்குமதி செய்வோம் - கரு.பழனியப்பன் விளாசல்
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்து வரும் இயக்குநர் கரு.பழனியப்பன் மத்திய மாநில அரசுகளை விளாசியுள்ளார்.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்து வரும் இயக்குநர் கரு.பழனியப்பன் மத்திய மாநில அரசுகளை விளாசியுள்ளார். நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட்டு பருப்பு உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் பெட்ரோலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யலாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் கிராம மக்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் கரு.பழனியப்பன் மக்கள் அனுமதியில்லாமல் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என கூறும் அரசுகள் தொடர்ந்து சமாதான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறினார். எதிர்ப்பு தெரிவித்தால் எப்படி பெட்ரோல் எடுப்பது எப்படி கார் ஓட்டுவது என அரசு கேட்பதாக கூறிய கரு.பழனியப்பன், இங்கே பெட்ரோல் எடுத்துவிட்டு பருப்பு எங்கே வாங்குவது என கேள்வி எழுப்பினார்.
மேலும் பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்களை இங்கே உற்பத்தி செய்வோம். பெட்ரோலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வோம் என்றும் அவர் கூறினார். கரு.பழனியப்பனின் இந்த கருத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications