திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்து விரைவில் முடிவு செய்வேன்.. விஷால் பரபர!
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு செய்வேன் என்று நடிகர் விஷால் பேட்டியளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு செய்வேன் என்று நடிகர் விஷால் பேட்டியளித்துள்ளார்.
தமிழக அரசியல் மிக முக்கியமான கட்டத்தை எட்டி இருக்கிறது. திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றத்தில் இன்னும் மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.
இதில் திமுக அதிமுக என்று அனைத்து கட்சிகளும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்த நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் முடிவில் விஷால் இருப்பதாக தகவல்கள் வருகிறது.

ஆர்.கே நகர்
நடிகர் விஷால் ஏற்கனவே ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது. இந்த நிலையில் ஆர்கே நகர் குறித்தும், திருப்பரங்குன்றம் தேர்தல் குறித்தும் விஷால் சென்னையில் நடந்த சினிமா விழா ஒன்றில் பேசியுள்ளார்.

தேர்தலில் போட்டி
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்து இப்போதய முடிவு செய்யவில்லை. இது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறேன். விரைவில் இதுகுறித்து முடிவு செய்வேன். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அறிவிப்பை வெளியிடுவேன். அதன்பின்பே தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிப்பேன் என்றுள்ளார்.

திருப்பரங்குன்றம் தேர்தல்
ஏற்கனவே திருப்பரங்குன்றம் தேர்தலில் திமுக, அதிமுக போட்டியிடுகிறது. அதேபோல் தினகரனின் அமுமுகவும் இந்த தேர்தலில் போட்டியிட உள்ளது. மேலும் மு.க அழகிரியும் திமுகவிற்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வாய்ப்புள்ளது. இதனால் இந்த தேர்தல் பலமுனை போட்டியாக மாற வாய்ப்புள்ளது.

கருணாஸ் குறித்து
விஷால் தனது பேட்டியில் கருணாஸ் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். அதில், யாராக இருந்தாலும் வரம்பு மீறி பேச கூடாது. அப்படி பேசினால் அரசு நடவடிக்கை எடுக்கத்தான் செய்யும். நடிகர் கருணாஸின் கைது தவறான விஷயமாக தெரியவில்லை. அரசு சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுத்து இருக்கிறது, என்றுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications