மக்களவைத் தேர்தல்: புதிதாக அமையும் எந்த அணியையும் வரவேற்போம்- கருணாநிதி
சென்னை: தேசிய அளவிலான 3வது அணியின் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டால் அது குறித்து திமுக செயற்குழு, பொதுக்குழுவில் கலந்து பேசி முடிவெடுப்போம் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை நான் வரவேற்கிறேன். இலங்கை தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் இன்றைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை போல இந்தியா முழுவதும் நிறைவேற்றினால் அது இலங்கையிலே உள்ள இலங்கை தமிழர்களுக்கு பெரிதும் ஆதரவாக அமையும்.

ஏற்காடு இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு செல்வது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. ஏற்கனவே இந்த அரசின் சார்பில் தொடங்கப்பட்ட குடிநீர் பாட்டிலில் இரட்டைஇலை சின்னம் பொறிக்கப்பட்டதைப்போல நேற்றைய தினம் முதல்வர் தொடங்கி வைத்த அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் எல்லாம் இரட்டை இலை சின்னம் பெரிதாக பொறிக்கப்பட்டுள்ளது பெரும் தவறு.
வரும் 30ம் தேதி 3வது அணி அமைப்பது குறித்து ஆலோசிக்க டெல்லியில் கூடுகின்ற கூட்டத்திற்கு திமுகவுக்கு இதுவரையில் அழைப்பு வரவில்லை. இந்தியாவின் நன்மைக்காக எந்த அணி அமைந்தாலும் அந்த அணியை நான் வரவேற்கிறேன்.
3வது அணி கூட்டத்திற்கு அழைப்பு வந்தால் அதைப்பற்றி எங்கள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடி கலந்து பேசி முடிவெடுக்கும் என்றார்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications