மறுபடியும் தொங்கும் மக்கள் நலக் கூட்டணி.. இந்த முறையாவது இறங்கி வருமா தேமுதிக?
சென்னை: தேமுதிகவை விடாமல் தொங்கிக் கொண்டிருக்கிறது மக்கள் நலக் கூட்டணி. ஆனால் விஜயகாந்த் தரப்போ அதை மதிப்பதாகவே இல்லை. இந்த நிலையில் மீண்டும் ஒருமுறை விஜயகாந்த்தை நேரில் சந்திக்கப் போகிறார்களாம் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள்.
தொடக்கத்திலிருந்தே விஜயகாந்த்துக்கு அழைப்பு விடுத்து வருகிறது மக்கள் நலக் கூட்டணி. ஆனால் அதைக் கண்டு கொள்ளவே இல்லை தேமுதிக.
திமுகவா, பாஜகவா என்று மாறி மாறிப் பேசி வந்தது. இரு தரப்பும் இவர்கள் இழுத்த இழுப்புக்கு ஒத்துவரவில்லை என்பதால் தனித்துப் போட்டி என்று அறிவித்தார் விஜயகாந்த். ஆனால் யார் வேண்டுமானாலும் வந்து பேசலாம் என்று, விஜயகாந்த்தை மீறி அறிவித்து மக்களையும், கட்சிகளையும் குழப்பி விட்டுப் போனார் பிரேமலதா விஜயகாந்த்.

யாரும் சீந்தவில்லை
விஜயகாந்த், பிரேமலதாவின் இந்தக் குழப்பம் காரணமாக மக்கள் மத்தியில் தேமுதிகவின் பெயர் ரொம்பவே கெட்டுப் போய் விட்டது. மேலும் கட்சிகளும் அவர்களை இப்போது கண்டு கொள்வதாகவே இல்லை.

மீண்டும் அழைப்பு
இந்த நிலையில்தான் விஜயகாந்த்தை மீண்டும் சந்திக்கப் போவதாகவும், அவர் கூட்டணிக்கு வர வேண்டும் என்றும் மக்கள் நலக் கூட்டணி கூறியுள்ளது.

நிர்வாகிகளைச் சந்திக்கிறார் விஜயகாந்த்
இந்த நிலையில் தனது கட்சி நிர்வாகிகளை சந்திக்கப் போகிறாராம் விஜயகாந்த். அடுத்த வாரம் மாநில நிர்வாகிகளை விஜயகாந்த் சந்திக்கவுள்ளார்.

நிர்வாகிகள் கோபம்
திமுகவுடன் கூட்டணி சேருவதைத் தவிர வேறு எந்த முடிவெடுத்தாலும் அது கட்சிக்கு நல்லதல்ல என்று தேமுதிக நிர்வாகிகள் கருதுகிறார்களாம். இதனால் விஜயகாந்த்துக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்களாம்.

மீண்டும் திமுக பக்கம் திரும்புமா?
இதனால் கூட்டணி குறித்துத் தீர்மானிக்க கட்சி நிர்வாகிகளை அடுத்த வாரம் சந்திக்கவுள்ளார் விஜயகாந்த். அப்போது கூட்டணி குறித்த இறுதி நிலைப்பாட்டுக்கு அவர் வரலாம் என்று தெரிகிறது.

பிரேமலதாவை மீறி முடிவெடுப்பாரா?
விஜயகாந்த் சொல்வதுதான் இறுதி, அவர் சொல்வதுதான் முடிவு என்று பிரேமலதாவும், சுதீஷும் பேசி வந்தார்கள். அப்படிப் பார்த்தால் தனித்துப் போட்டி என்று விஜயகாந்த் சொல்லியதுதான் இறுதி முடிவாக இருக்க முடியும். ஆனால் நடப்பதைப் பார்த்தால் விஜயகாந்த்தைத் தாண்டிய சக்திதான் தேமுதிகவை இயக்குவது போலத் தெரிகிறது. எனவே திமுக கூட்டணி வேண்டாம் என்று கூறி வரும் பிரேமலதாவை முடிவை மீறி விஜயகாந்த் முடிவெடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பார்க்கலாம்...!
-
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல்











Click it and Unblock the Notifications