தே.மு.தி.க. மாநாட்டுக்கு அனுமதி கிடைக்குமா?: காலம் தாழ்த்தும் காவல்துறையால் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ள தே.மு.தி.க. ஊழல் எதிர்ப்பு மாநாட்டிற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், இதுவரை மாநாட்டிற்கு அரசு அனுமதி கிடைக்கவில்லை. இதனால், இந்த மாநாடு நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிப்ரவரி 2ஆம் தேதி உளுந்தூர்பேட்டையில் தே.மு.தி.க. ஊழல் எதிர்ப்பு மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் விஜயகாந்த், நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும் கட்சி குறித்து அறிவிப்பார் என்பதால், பல்வேறு அரசியல் கட்சிகள் இந்த மாநாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறஞ்சி கிராமத்தில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு பந்தல் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

அனுமதி கேட்டு விண்ணப்பம்

அனுமதி கேட்டு விண்ணப்பம்

அதேநேரம் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளால் மாநாடு நடைபெறுமா எனக் கேள்விக்குறி எழுந்துள்ளது. தேமுதிக மாநாட்டுக்கு அனுமதி கேட்டுக் கடந்த 11-ம் தேதி விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அனுமதி அளித்தோ, அனுமதி மறுக்கப்பட்டதாகவோ எந்த பதிலும் தேமுதிகவுக்கு வரவில்லை.

நீதிமன்றத்தில் அனுமதி

நீதிமன்றத்தில் அனுமதி

அப்படி தடை செய்யப்படுவதாக எழுத்துபூர்வமாகத் தெரிவித்தால், நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்றுவிடும் வாய்ப்பு உள்ளதால், இன்னமும் அரசு தரப்பில் பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

காலம்தாழ்த்தும் காவல்துறை

காலம்தாழ்த்தும் காவல்துறை

இதைக் கருத்தில் கொண்டு ஜனவரி 31-ம் தேதி மாலை அனுமதி மறுக்கப்பட்டதாக எழுத்துபூர்வமாகப் பதில் அளிக்கப்படும் என அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி 1 ம் தேதி சனிக்கிழமை நீதிமன்றம் விடுமுறை என்பதால் தேமுதிக நீதிமன்றம் செல்ல முடியாது என்பதாலேயே இன்னும் அனுமதி தொடர்பான எந்த உத்தரவும் அரசுத் தரப்பில் அளிக்கவில்லை என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாடகைக்கார்கள் உரிமையாளர்கள்

வாடகைக்கார்கள் உரிமையாளர்கள்

மேலும் மாநாட்டுக்குத் தடை விதிக்கப்படும்பட்சத்தில் அந்த மாநாட்டுக்கு ஆட்களை வாடகை வாகனங்கள் ஆட்களை ஏற்றிச் செல்லாமல் இருக்கவே அந்தந்தப் பகுதி வாடகை கார் உரிமையாளர்களின் கூட்டத்தைக் காவல் துறை நடத்தி வருவதாகத் தெரிகிறது.

போலீஸ் அறிவுறுத்தல்

போலீஸ் அறிவுறுத்தல்

இதை உறுதி செய்யும்விதத்தில் திண்டிவனம் டிஎஸ்பி சிலம்பரசன் தலைமையில் திங்கள்கிழமை வாடகை கார் ஓட்டுநர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்துக் கார் உரிமையாளர்களின் பெயர்கள், தொடர்பு எண் உள்ளிட்ட தகவல்களைக் காவல் நிலையத்தில் கொடுக்க வேண்டும். தமிழக அரசு தடை செய்யும் அமைப்புகளுக்கும், மாநாட்டுக்கும் வாடகை கார் செல்லக்கூடாது. ஓங்கூர் செக் போஸ்ட்டில் வாகனச் சோதனை செய்து தடை செய்யப்பட்ட மாநாட்டுக்குச் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்படும் என இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கலெக்டர் அறிவிப்பு

கலெக்டர் அறிவிப்பு

டிஜிட்டல் விளம்பரப் பேனர் வைக்க அனுமதி கோரி 25-ம்தேதி தேமுதிக அளித்த மனுவுக்கும் இதுவரை பதிலில்லை. அதே சமயம் டிஜிட்டல் பேனர் வைப்பதற்கு பதினைந்து நாட்களூக்கு முன்பே அரசு அனுமதி பெற வேண்டும் என்று செய்தி குறிப்பு வெளியிட்டு தே.மு.தி.க.வினரை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.

தடையில்லா சான்று

தடையில்லா சான்று

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சம்பத் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைப்பது சட்டப்படி குற்றம். 15 நாட்களுக்கு முன்பே அந்தந்த வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பிக்கும்போது எங்குப் பேனர் வைக்கப்படுகிறதோ அந்த இடம் தனியாருக்குச் சொந்தமாக இருந்தால் இடத்தின் உரிமையாளரிடமும், அரசுக்குச் சொந்தமாக இருந்தால் அந்தத் துறையில் தடையில்லா சான்று பெற்று அத்துடன் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மாநாட்டுக்கு தடை

மாநாட்டுக்கு தடை

இதன்மூலம் தேமுதிக மாநாட்டைத் தடை செய்ய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரியவருகிறது. தே.மு.தி.கவினர் மாநாட்டு பணிகளை விறுவிறுவென ஆரம்பித்து எழுபத்தைந்து சதவீத பணிகளை முடித்துவிட்டாலும், அரசு தரப்பில் இருந்து இதுவரை அனுமதி வழங்காத நிலையில் இந்த மாநாடு நடக்குமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

தேமுதிகவினர் நம்பிக்கை

தேமுதிகவினர் நம்பிக்கை

எதிர்ப்பிலேயே வளர்ந்த இயக்கம் தேமுதிக. சட்டவிரோதமாக அதிகாரிகள் நடந்துகொள்ள மாட்டார்கள் என நம்புகிறோம். திட்டமிட்டப்படி மாநாடு நடக்கும்" என்று எதிர்பார்ப்புடன் கூறுகின்றனர் தேமுதிகவினர். அரசும், அதிகாரிகளும் என்ன நினைக்கிறார்களோ?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+