ஜெ. சிலையில் மாற்றங்கள் செய்யப்படும்.. அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு
ஜெ. சிலையில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
Recommended Video

சென்னை: ஜெ. சிலையில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
மறைந்த முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் என்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது வெண்கலச் சிலை திறந்து வைக்கப்பட்டது.

ஆனால் நேற்று காலையில் ஜெயலலிதாவின் சிலை திறக்கப்பட்டதில் இருந்து, சிலையில் இருப்பது ஜெயலலிதா போலவே இல்லை என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் கிளம்பின. பலரும் இவர் இந்த ஜாடையில் இருக்கிறார், அந்த ஜாடையில் இருக்கிறார் என்று விமர்சனம் செய்து இருந்தார்கள்.
இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது இந்த சிலையில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது.
அதன்படி ஜெயலலிதா சிலையில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். இதற்காக அந்த சிலையை செய்த சிற்பி மீண்டும் அழைக்கப்பட உள்ளார்.
ஏப்ரல் 4-ஆம் தேதி திருச்சியில் கமல் ஏற்பாடு செய்துள்ள பொதுக் கூட்டம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் ஜெயக்குமாரோ, ஏப்ரல் மாதமே முட்டாள்கள் மாதமாகும். எனவே அதுகுறித்து நான் பேச விரும்பவில்லை என்றார் அமைச்சர்.


Click it and Unblock the Notifications
