ஸ்டெர்லைட் ஆலையை மூடும்வரை ஓயமாட்டேன்.. தொடர்ந்து போராடுவேன் - வைகோ ஆவேசம்
ஸ்டெர்லைட் ஆலையை மூடும்வரை நான் ஓயமாட்டேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை : ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென்று முதன்முதலில் குரல் கொடுத்தவன் நான் தான், அந்த ஆலையை மூடும் வரை நான் ஓயமாட்டேன் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, திமுகவின் மண்டல மாநாடு மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது என்று குறிப்பிட்டார். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தாமதப்படுத்த மத்திய அரசு அனைத்துவித முயற்சிகளையும் எடுத்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசு நிச்சயம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது இதற்கான தீர்வு, இந்தப் பிரச்னை அரசியல் சாசன அமர்வுக்குச் சென்றால் தான் மாறும். எனவே அதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அதை விடுத்து, மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டம் வலுவடைந்துவருகிறது. அந்த ஆலைக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்தவன் நான் தான். அதற்காக நீதிமன்றம் வரை சென்றேன். அந்த ஆலையை மூடும் வரை போராடுவேன் என்றும், அதுவரை ஓயமாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications