ஸ்டாலினை சந்தித்தது ஏன்? த.மா.கா தலைவர் வாசன் பேட்டி
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலினை அவரின் ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் வைத்து சந்தித்து அரை மணி நேரத்திற்கும் அதிகமாக ஆலோசனை நடத்தினார்.
சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் வாசன் கூறியதாவது: நீண்ட காலத்திற்கு பிறகு ஸ்டாலினுடன் அரசியல் ரீதியாக சந்திப்பு நடந்துள்ளது. விரைவில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க உள்ளேன்.

தமிழகம் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளான, காவிரி, முல்லைப்பெரியாறு பிரச்சினைகள் தொடர்பாக ஸ்டாலினுடன் விவாதித்தேன், என்றார், வாசன். இதனிடையே, உள்ளாட்சி தேர்தல் கூட்டணி பற்றி ஆலோசிக்கப்பட்டதா என்ற நிருபர்களின் கேள்விக்கு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் என்ற முறையில், திமுக பொருளாளரை சந்தித்துள்ளேன் எனும்போதே, அதன் அர்த்தத்தை நீங்கள் புரிந்து கொள்ளலாம். இவ்வாறு வாசன் பதிலளித்தார்.
கூட்டணி பற்றிய பேச்சுக்கு நேரடியாக வாசன் பதிலளிக்கவில்லை என்றபோதிலும் சூசகமாக கூட்டணி பற்றி பேசயதாக வாசன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்!












Click it and Unblock the Notifications