லலித் மோடி பற்றி சந்திரமண்டலத்தில்தான் பேசுவாரோ மோடி?.. சீண்டும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் நடைபெறும் பிரச்சனைகளைப் பற்றி இந்தியாவில் பேசுவதே கிடையாது. வெளிநாடுகளில்தான் போய் பேசுவார். லலித்மோடி விவகாரம் தொடர்பாக அநேகமாக சந்திர மண்டலத்தில் போய் பேசுவார் என்று காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இளங்கோவனிடம் லலித் மோடி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் உள்ளாரே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், "லலித் மோடி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை எந்தவித கருத்தும் சொல்லாமல் இருக்கிறார் என்று சொன்னால், ஒருவேளை அவர் நாளைக்கு ஏதாவது ஒரு தேசத்திற்கு போய் சொல்லுவார் என்று நினைக்கிறேன்" என்றார்.

சந்திரமண்டலத்தில் பேசலாம்
பிரதமர் மோடி இந்திய பிரச்சனைகளை இந்தியாவில் பேசுவதே கிடையாது. இந்தியாவைப் பற்றி, இந்தியாவில் நடக்கும் அரசியல் பிரச்சனைகளை வெளிநாடுகளில்தான் போய் பேசுவார். அநேகமாக இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் சந்திர மண்டலம் போனாலும் போவார். அங்கே போய் பேசினாலும் பேசுவார் என்று நான் நினைக்கின்றேன் என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறினார்.

ஆர்.கே.நகரில் முகாம்
ஆர்.கே.நகரில் கட்சி கரை வேட்டிக்கொண்டு உயர் போலீஸ் அதிகாரி பிரச்சாரம் செய்வது பற்றி இளங்கோவனிடம் கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர், ஆர்.கே.நகரில் ஒரு போலீஸ் அதிகாரி மட்டுமல்ல ஏராளமான போலீஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். அமைச்சர்களே அங்குதானே முகாமிட்டிருக்கிறார்கள் என்றார்.

ஆரத்திக்கு பணம்
அமைச்சர் வரும்போது மக்கள் ஆரத்தி எடுக்கிறார்கள். அவர்களுக்கு அமைச்சர் வணக்கம் போட்டு சென்றுவிடுகிறார். பின்னால் வருபவர்கள் ஆரத்தி எடுத்தவர்களுக்கு ஆயிரம், இரண்டாரம் ரூபாய் என போடுகிறார்கள். இது பத்திரிக்கைகளிலும் வந்திருக்கின்றது. இதைப்பற்றி எந்தவிதமான நடவடிக்கைகளும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

சேஷன் காலத்தில்
சேஷன் அவர்கள் ஒரு முறை தேர்தல் ஆணையராக இருக்கும்போது, பெருந்துறையில் இடைத்தேர்தல் வந்தது. அதை மிகவும் நியாயமாக அன்றைக்கு சேஷனின் வழிகாட்டுதலில் தமிழக தேர்தல் ஆணையம் செய்தது என்றார்.

அதிமுகவிற்கு ஜால்ரா
இன்றைக்கு தேர்தல் ஆணையமும், அதில் அதிகாரிகளாக இருக்கிறவர்களும் அதிமுகவுக்கு ஜால்ரா அடிப்பவர்களாகவும், மக்களுக்கு பணம் விநியோகம் செய்வதற்கு அதிமுக அமைச்சர்களுக்கு வழி ஏற்படுத்தி தருகின்ற ஏஜெண்டுகளாக இருக்கிறார்கள். ஜனநாயகத்தை காப்பாற்றக் கூடிய தேர்தல் ஆணையமாக இல்லை என்றும் கூறினார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications