"பார்ரா.. தினகரன் லீடிங்கா..." - சிறையில் சசிகலா மகிழ்ச்சி?!
ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகளில் நிகழும் மாற்றங்கள் குறித்து நிமிடத்திற்கு நிமிடம் தெரிந்துகொள்ள சசிகலா ஆர்வத்துடன் இருப்பதாக தகவல் வெளியாகிறது.
Recommended Video

பெங்களூரு: சொத்துகுவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று வரும் சசிகலா தற்போது ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகளை நொடிக்கு நொடி தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தல் எதிர்க்கட்சிகளுக்கும் அதிமுகவுக்கும் இடையே நடக்கும் பலப்பரீட்சையோ இல்லையோ, சசிகலாவுக்கும், ஆளுங்கட்சிக்கும் இடையே நடக்கும் தர்மயுத்தமாகவே கருதப்படுகிறது. சசிகலா சிறையில் இருக்கும்போது அதிமுக துண்டுதுண்டாக்கப்பட்டு, மீண்டும் ஒட்டப்பட்டு, தினகரன் ஓரங்கட்டப்பட்டு என்று பல எதிர்ப்பாராத சம்பவங்கள் நடந்தேறின.

ஜெயலலிதா இறந்த பின் அதிமுக குறித்து மக்களின் மனநிலை என்ன, அவர்கள் யாருக்கு சாதகமாக இருக்கிறார்கள் என்ற விபரம் தெரியாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இதற்கான விடையை தெரிந்துக்கொள்ள ஆர்.கே.நகர் தேர்தல் ஒரு சிறந்த வழியாக தற்போது கருதப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்திலிருந்தே தினகரன் முன்னிலை பெறும் செய்தி அறிந்து பெங்களூரு சிறையில் சசிகலா மகிழ்ச்சியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தேர்தல் முடிவுகளின் நகர்வுகளை அவர் நொடிக்கு நொடி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருப்பதாகவும் தெரிகிறது.
இதற்கு சிறை அதிகாரிகளின் உதவியை சசிகலா நாடினாரா, அல்லது தன்னார்வத்தில் சிறை அதிகாரிகள் சசிகலாவிற்கு உதவுகிறார்களா என்ற தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஆனால் தினகரனின் முன்னிலை சசிகலாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்லும் முன் ஜெயலலிதாவின் சமாதி மீது மூன்று முறை அடித்து சசிகலா செய்த சத்தியத்தில் ஒன்று ஆர்.கே.நகரில் தினகரனை வெற்றியடைய வைப்பேன் என்ற சபதமாக கூட இருக்கலாம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications